

விசமத்தனமாக செய்தி அது – புனைந்து எழுதியவரே – அதனை அழித்துவிட்டார் – மறுக்கும் சுமந்திரன் !
தமிழரசுக் கட்சியை சேர்ந்த இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் இரா.சம்பந்தனை சந்தித்து கலந்துரையாடியுள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
எனினும் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரை சந்திக்க விரும்பமில்லை என சம்பற்தன் தெரிவித்ததாக வெளியான செய்தி உண்மைக்கு புறம்பானத என்றும் எம்.ஏ.சுமந்திரன் குறிப்பிட்டுள்ளார்.
அவ்வாறான சம்பவம் எவருக்கும் நடந்திருக்கவில்லை என்றும் எம்.ஏ.சுமந்திரன் உறுதியாக குறிப்பிட்டுள்ளார்.
அண்மையில் யாழல் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் எழுப்பிய கேள்விக்கு அவர் இவ்வாறு தெரிவித்திருந்தார்.
இந்த செய்தி விசமத்தனமாக, வேண்டுமென்றே எழுத்தப்பட்ட செய்தி என்றும் அவ்வாறு இந்த செய்தியை எழுத்தியவர்கூட ஓரிரு மணித்தியாலங்களில் அந்த செய்தியை அகற்றி விட்டதாகவும் எம்.ஏ.சுமந்திரன் மேலும் தெரிவித்துள்ளார்.
இது வேண்டும் என்றே புனைந்து எழுதப்பட்ட செய்தியாகவே தென்படுவதாக எம்.ஏ.சுமந்திரன் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த 10ஆம் திகதி மதியம் 12 மணியளவில் சம்பந்தனை சந்தித்து கலந்துரையாடியிருந்தாதகவும் ஆனால் கடந்த 9ஆம் திகதி இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் சம்பந்தனை சந்தித்து கலந்துரையாடியிருந்தாகவும் எம்.ஏ.சுமந்திரன் மேலும் தெரிவித்துள்ளார்.