யாழ்.பேருந்து நிலையம் முன்பாக போராட்டத்தில் குதித்த இலங்கை ஆசிரியர் சங்கத்தினர்!

யாழ்.பேருந்து நிலையம் முன்பாக போராட்டத்தில் குதித்த இலங்கை ஆசிரியர் சங்கத்தினர்!

யாழ் பேருந்து நிலையம் முன்பாக இன்று காலை இலங்கை ஆசிரியர் சங்கத்தின் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

நாடளாவிய ரீதியில் இடம்பெற்று வரும் பாரிய தொழிற்சங்க போராட்டத்திற்கு ஆரவாக இப்போராட்டம் இடம்பெற்று வருகின்றது.

சம்பளத்தின் 2/3 கிடைக்கும் வரை 20000/= கொடுப்பனவை உடனே கொடு, ஆசிரியர்,அதிபர், ISA மற்றும் பிரிவெனா, ஆசிரியர்களின் பதவி உயர்வு மற்றும் பிரச்சினைகளுக்கு உடனே தீர்வு கொடு!, சம்பளம், சம்பள நிலுவை மீது அறவிடும் வரியை நிறுத்து!, பெற்றுக் கொண்ட வங்கிக்கடனுக்கு அறவிடும் மேலதிக வட்டியை நீக்கு!, மாணவர்களின் போசணை, பாடசாலை உபகரணங்கள், போக்குவரத்து சிக்கல்கள் என்பவற்றுக்கு உடனே தீர்வு கொடு!, பாடசாலை மின்சாரம், நீர், தொலைபேசி செலவை பெற்றோர்கள் மீது திணிப்பதை நிறுத்து! ஜனநாயகத்தை தடுக்கும் உள்ளூராட்சி மன்ற தேர்தலை பிற்போடுவதை நிறுத்து! மக்களை அடக்கும் அரச ஒடுக்கு முறையை நிறுத்து, போன்ற கோரிக்கைகளை முன்வைத்து குறித்த போராட்டம் இடம்பெற்று வருகின்றது.

CATEGORIES
TAGS
Share This