கடன் கிடைத்தவுடன் அமைச்சரவையில் மாற்றம்?

கடன் கிடைத்தவுடன் அமைச்சரவையில் மாற்றம்?

சர்வதேச நாணய நிதியத்தின் கடன் கிடைக்கப்பெற்ற பின்னர் அமைச்சரவை மாற்றம் இடம்பெறும் என அமைச்சர் ஹரின் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.

இதன்போது எதிரணியில் உள்ளவர்களும் அரசாங்கத்துடன் இணைந்து கொள்வார்கள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

விரைவில் அமைச்சரவையில் மாற்றம் ஏற்படுத்தப்படவுள்ளதாக முன்னதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.

குறிப்பாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் சிரேஸ்ட உறுப்பினர்கள் சிலருக்கும் அமைச்சு பதவிகள் வழங்கப்படவுள்ளதாக கூறப்படுகின்றமைக் குறிப்பிடத்தக்கது.

CATEGORIES
TAGS
Share This