

குஜராத்தில் எச்3என்2 காய்ச்சல் தாக்கம் ; பெண் ஒருவர் பலி?
குஜராத்தின் வதோதரா நகரில் உள்ள அரசு மருத்துவமனையில் 58 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் காய்ச்சலால் உயிரிழந்துள்ளார்.
அவருக்கு இன்ஃப்ளூயன்ஸா வைரஸ் காய்ச்சல் ஏற்பட்டதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இதையடுத்து, அவரது மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும், பெண்ணின் மரணத்திற்கான சரியான காரணத்தை மறுஆய்வுக் குழு தீர்மானிக்கும் என்றும் மருத்துவ அதிகாரி தெரிவித்துள்ளார்.
அந்த பெண் கடந்த 11ஆம் திகதி அன்று காய்ச்சல் காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், பின்னர் சர் சாயாஜிராவ் ஜெனரல் (எஸ்எஸ்ஜி) மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அவர் மார்ச் 13ஆம் திகதி அன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
CATEGORIES இந்தியா
TAGS எச்3என்2