

ஸ்பிரிங்வேலி தோட்டத்தில் பாடசாலை மாணவன் 27 நாட்களாக மாயம்..
பதுளை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஸ்பிரிங்வேலி தோட்டம் நாவில பிரிவில் வசிக்கும் பத்தேகம வித்தியாலயத்தில் தரம் 11 கல்வி கற்கும் விவேகானந்தன். ரகுமான் என்ற மாணவனை கடந்த மாதம் 15 திகதி முதல் காணவில்லை என்று மாணவனின் தகப்பனாரினால் பதுளை பொலிஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
காணாமல் போன மாணவன் கடந்த மாதம் 15 திகதி மேலதிக வகுப்புக்கு செல்வதாக கூறி வீட்டில் இருந்து சென்று இது வரை வீடு திரும்பவில்லை.
மாணவனை தேடும் பணியில் உறவினர்கள் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
மேலதிக விசாரணைகளை பதுளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்
ராமு தனராஜா


CATEGORIES செய்திகள்