

ரஜினியை சந்தித்த கிரிக்கெட் வீரர்!
இந்திய கிரிக்கெட் வீரர் சன்சு சாம்சன் நடிகர் ரஜினி காந்தை அவரது வீட்டில் சந்த்தித்தார். 28 வயதான கேரளத்தில் பிறந்த சாம்சன் இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் காப்பாளர் மற்றும் ஒரு சிறந்த துடுப்பாட்ட வீரருமாவார். மேலும் ஐபிஎல்லில் ராஜஸ்தான் அணியின் தலைவராகவும் விளங்கினார்.
அதிரடியாகவும் பெரிய உழைப்பில்லாமல் சிக்ஸர்களை அடிப்பதிலும் சிறப்பு பெற்றவர். சிறிய வயதிலிருந்தே நடிகர் ரஜினியின் ரசிகர் என்று பல்வேறு நேர்காணல்களில் தெரிவித்துள்ளார். தற்போது அவரது கனவு நனவாகியுள்ளது.
ஐபிஎல் 2023 மார்ச் மாதம் 31 ஆம் திகதி தொடங்குகிறது. சாம்சன் இதற்கு தீவிரமாக பயிற்சி எடுத்து வருகிறார். நடிகர் ரஜினி நெல்சன் இயக்கத்தில் ’ஜெயிலர்’ படத்தில் நடித்து வருகிறார்.
நடிகர் ரஜினியின் அழைப்பின் பேரில் சாம்சன் ஞாயிற்றுக்கிழமை அவரது வீட்டிற்கு சென்று சந்தித்துள்ளார். சாம்சன் தனது ட்விட்டர் பக்கத்தில் இது குறித்து கூறியதாவது :
7 வயதில் இருந்தே நான் சூப்பர் ஸ்டார் ரஜினியின் ரசிகன். அப்போதிலிருந்தே எனது பெற்றோர்களிடன் கூறி வந்தேன் நிச்சயம் ஒருநாள் ரஜினியை அவரது வீட்டில் சென்று சந்திப்பேன் என. தலைவர் என்னை அவரது வீட்டிற்கு அழைத்ததன் மூலம் 21 ஆண்டுகள் கழித்து எனது கனவு நனவானது எனக் குறிப்பிட்டார்.