ஹஜ் பயணத்துக்கு விண்ணப்பிக்க 20ஆம் திகதி கடைசி நாள்!

ஹஜ் பயணத்துக்கு விண்ணப்பிக்க 20ஆம் திகதி கடைசி நாள்!

புனித ஹஜ் பயணிகள் இணையம் மூலம் விண்ணப்பிக்கும் கடைசி திகதியை வருகிற 20ஆம் திகதி வரை இந்திய ஹஜ் குழு நீட்டித்துள்ளது.

இந்திய ஹஜ் குழு இணையதளத்தின் (www.hajcommittee.gov.in) வழியாக அல்லது மும்பை இந்திய ஹஜ் குழுவின் ‘HCoI’ செயலியை அலைபேசியில் பதிவிறக்கம் செய்வதன் மூலம் விண்ணப்பத்தை பூர்த்தி செய்யலாம்.

இதனைத் தொடர்ந்து விண்ணப்பதாரர்கள் 20ஆம் திகதி அன்று அல்லது அதற்கு முன்னர் வழங்கப்பட்டு குறைந்தது 3.2.2024 வரையில் செல்லத்தக்க எந்திரம் மூலம் படிக்கத்தக்க பாஸ்போர்டின் முதல் மற்றும் கடைசி பக்கம், வெள்ளை பின்னணியுடன் கூடிய சமீபத்திய பாஸ்போர்ட் அளவு புகைப்படம், குழுத் தலைவரின் காசோலை நகல் அல்லது ஐ.எப்.எஸ்.சி. குறியீட்டுடன் கூடிய சேமிப்பு வங்கிக் கணக்கு புத்தக நகல் மற்றும் முகவரி சான்றின் நகல் ஆகியவற்றை பதிவேற்றம் செய்யவேண்டும். கூடுதல் விவரங்களை இந்திய ஹஜ் குழு இணையதளத்தில் தெரிந்துக்கொள்ளலாம்.

CATEGORIES
TAGS
Share This