

வரலாற்றில் இன்று – மார்ச் 14: போலந்தில் வானூர்தி ஒன்று வார்சாவாக்கு அருகில் வீழ்ந்ததில், 14 அமெரிக்க குத்துச்சண்டை வீரர்கள் உட்பட 87 பேர் உயிரிழந்தனர் – 1980
1898 – மருத்துவர் வில்லியம் கேப்ரியல் ரொக்வூட் இலங்கை சட்டவாக்கப் பேரவைக்கு தமிழ்ப் பிரதிநிதியாகத் தெரிவு செய்யப்பட்டார்.
1900 – “தங்கத் தகுதரச் சட்டம்” அங்கீகரிக்கப்பட்டு, அமெரிக்க டாலர் நாணயம் தங்கத்தின் தரத்தில் வைக்கப்பட்டது.
1903 – பனாமா கால்வாயை அமைக்கும் பொறுப்பை ஐக்கிய அமெரிக்காவுக்கு வழங்கும் உடன்படிக்கையை அமெரிக்க மேலவை ஏற்றுக்கொண்டது. ஆனாலும், இவ்வுடன்படிக்கையை கொலம்பிய மேலவை பின்னர் நிராகரித்தது.
1926 – கோஸ்ட்டா ரிக்காவில் தொடருந்து ஒன்று பாலம் ஒன்றில் இருந்து வீழ்ந்ததில் 248 பேர் உயிரிழந்தனர், 93 பேர் காயமடைந்தனர்.
1931 – இந்தியாவின் முதலாவது பேசும் படம் ஆலம் ஆரா வெளியிடப்பட்டது.
1939 – சிலோவாக்கியா ஜேர்மனியின் அழுத்தத்தில் விடுதலையை அறிவித்தது.
1942 – அமெரிக்காவில் முதல் தடவையாக சிகிச்சை ஒன்றில் பெனிசிலின் வெற்றிகரமாக பயன்படுத்தப்பட்டது.
1943 – இரண்டாம் உலகப் போர்: கிராக்கோவ் வதைமுகாம் மூடப்பட்டது.
1951 – கொரியப் போர்: இரண்டாவது முறையாக ஐ.நா படைகள் சியோல் நகரைக் கைப்பற்றியது.
1961 – இரண்டு முறிந்த அம்பு என்ற அணுவாயுதங்களைக் கொண்டு சென்ற அமெரிக்க வான்படையின் வானூர்தி கலிபோர்னியாவில் யூபா நகரில் வீழ்ந்து விபத்துக்குள்ளானது.
1978 – இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகள் தெற்கு லெபனானை ஆக்கிரமித்துக் கைப்பற்றின.
1979 – சீனாவில் பெய்ஜிங் நகரில் விமானம் ஒன்று தொழிற்சாலை ஒன்றின் மீது வீழ்ந்ததில் 44 பேர் உயிரிழந்தனர், 200 பேர் காயமடைந்தனர்.
1980 – போலந்தில் வானூர்தி ஒன்று வார்சாவாக்கு அருகில் வீழ்ந்ததில், 14 அமெரிக்க குத்துச்சண்டை வீரர்கள் உட்பட 87 பேர் உயிரிழந்தனர்.
1982 – தென்னாப்பிரிக்க அரசு இலண்டன், ஆபிரிக்க தேசிய காங்கிரசு தலைமையகம் மீது குண்டு வீசியது.
1994 – லினக்ஸ் கருனி 1.0.0 வெளியிடப்பட்டது.
1995 – ரஷ்ய விண்கப்பல் ஒன்றில் அமெரிக்க விண்ணோடி ஒருவர் (நோர்மன் தகார்ட்) முதன் முதலாக சென்றார்.
1998 – தெற்கு ஈரானில் 6.9 ரிக்டர் அளவு நிலநடுக்கம் தாக்கியது.
2006 – சாட்டில் இடம்பெற்ற இராணுவப் புரட்சி தோல்வியில் முடிந்தது.
2008 – திபெத்தின் லாசா நகரம் உட்பட பல பகுதிகளில் வன்முறைகளும், ஆர்ப்பாட்டப் பேரணிகளும் இடம்பெற்றன.
2019 – மொசாம்பிக்கை சூறாவளி தாக்கியதில் 1000 பேர் வரை உயிரிழந்தனர்.