ரயில் பயணிகளிடம் ரூ.200 கோடி அபராதம் வசூல்!

ரயில் பயணிகளிடம் ரூ.200 கோடி அபராதம் வசூல்!

தெற்கு மத்திய ரயில்வேயில் இந்த நிதியாண்டில் டிக்கெட் எடுக்காமல் பயணித்ததாக 28 லட்சம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளது.

அவர்களிடம் இருந்து ரூ. 200.17 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். கடந்த 2019-20ஆம் நிதியாண்டில் அதிகபட்சமாக ரூ.154.29 கோடி வசூல் செய்யப்பட்டு உள்ளது.

டிக்கெட் எடுக்காமல் பயணம் செய்தவர்கள் மற்றும் லக்கேஜ் எடுத்து சென்றவர்கள் மீதும் வழக்கு பதிவு செய்து இந்த அபராத தொகை வசூலிக்கப்பட்டுள்ளது.

CATEGORIES
TAGS
Share This