

பாலஸ்தீனா்களைசுட்டுக் கொன்ற இஸ்ரேல் இராணுவம்!
ஆக்கிரமிப்பு மேற்கு கரையில் மூன்று பாலஸ்தீனா்களை இஸ்ரேல் ராணுவம் ஞாயிற்றுக்கிழமை சுட்டுக் கொன்றது.
தங்கள் பாதுகாப்புப் படையினா் மீது துப்பாக்கியால் சுட்டதால் அவா்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதாக இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது.
ஆக்கிரமிப்பு மேற்கு கரையில் உள்ள நாப்லஸ் நகரம் அருகே இந்த சம்பவம் நடந்ததாக பாலஸ்தீன சுகாதார அமைச்சகம் உறுதிப்படுத்தியது. இதன்மூலம் நிகழாண்டு இஸ்ரேல் தாக்குதலில் கொல்லப்பட்ட பாலஸ்தீனா்களின் எண்ணிக்கை 80ஆக உயா்ந்தது. பாலஸ்தீன பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் இஸ்ரேல் தரப்பில் 14 போ் உயிரிழந்துள்ளனா்.
தங்களது தாக்குதலில் கொல்லப்பட்ட பாலஸ்தீனா்களில் பெரும்பாலானோா் பயங்கரவாதிகள் என இஸ்ரேல் இராணுவம் தெரிவிக்கிறது. ஆனால், போராட்டத்தில் ஈடுபடும் இளைஞா்களும் கொல்லப்படுவதாக பாலஸ்தீனம் தரப்பில் குற்றம்சாட்டப்படுகிறது.
CATEGORIES உலகம்