

டெல்லி விமானத்தில் பயணி உயிரிழப்பு!
டெல்லியிலிருந்து சென்ற விமானத்தின் பயணி ஒருவர் நடுவானில் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லியில் இருந்து இன்று காலை கதார் நாட்டின் டோஹா நகருக்கு இண்டிகோ விமானம் புறப்பட்டுச் சென்றது. விமானம் கிளம்பிய சிறிது நேரத்தில் விமானத்தில் பயணித்த நைஜீரியா நாட்டின் அப்துல்லா(60) என்பவர் மயங்கி விழுந்துள்ளார்.
இதையடுத்து கராச்சி விமான நிலையத்தின் கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்பு கொண்ட விமானி, அவசர தரையிறக்கத்திற்கு அனுமதி கோரினார்.
உடனடியாக தரையிறக்கப்பட்டு விமானத்தில் மயங்கிய பயணியை பரிசோதித்த மருத்துவக் குழுவினர்கள் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து, பிற பயணிகள் டோஹா செல்வதற்கான ஏற்பாடுகளை விமான நிலைய அதிகாரிகளுடன் இணைந்து இண்டிகோ நிறுவனம் மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
CATEGORIES இந்தியா