போர்க்குற்றங்களைப் புரிந்த இலங்கையின் இராணுவ அதிகாரி ஐ.நா.வில் பங்கேற்பு; கனேடிய சட்டத்தரணி கேள்வி!

போர்க்குற்றங்களைப் புரிந்த இலங்கையின் இராணுவ அதிகாரி ஐ.நா.வில் பங்கேற்பு; கனேடிய சட்டத்தரணி கேள்வி!

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் அமர்வில், இலங்கையின் இராணுவ அதிகாரி மேஜர் ஜெனரல் குலதுங்க பங்கேற்றமை தொடர்பில், கனேடிய சட்டத்தரணியும், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் குழுவின் நிபுணத்துவ உறுப்பினருமான வி.ஜே.கிரான் (Marcia V. J. Kran ) கேள்வி எழுப்பியுள்ளார்.

சித்திரவதை குற்றச்சாட்டுக்கள் மற்றும் போர்க்குற்றங்களைப் புரிந்ததாகக் குற்றம் சுமத்தப்பட்ட வவுனியா ஜோசப் முகாமில், குலதுங்க அதிகாரியாக 2016-2017 வரை பணியாற்றியுள்ளார்.

மனித உரிமைகளுக்கான உயர்ஸ்தானிகர் அலுவலகமும் இந்தக் குற்றச்சாட்டுகளை நம்பகமானதாகக் கண்டறிந்துள்ளது.

இந்தநிலையில், அவர் நடந்த மீறல்களுக்குப் பொறுப்புக்கூறுவதற்கான நடவடிக்கைகளில் ஈடுபடமுடியுமா என்று ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் குழுவின் நிபுணத்துவ உறுப்பினருமான வி.ஜே.கிரான் வினவியுள்ளார்.

CATEGORIES
TAGS
Share This