சம்பந்தனின் கோட்டைக்குள் புகுந்த சுமந்திரன், சாணக்கியன்; புதிய தலைமைக்காக திருமலையில் அத்துமீறல்

சம்பந்தனின் கோட்டைக்குள் புகுந்த சுமந்திரன், சாணக்கியன்; புதிய தலைமைக்காக திருமலையில் அத்துமீறல்

தமிழ் தேசிய பரப்பில் வெற்றிடமாக காணப்படும் தலைமைக்கான போட்டியில் பலரும் இறங்கியிருக்கும் நிலையில்,தமிழரசு கட்சியின் தலைமைக்கு பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனை கொண்டுவருவதற்கான முயற்சிகள் மும்முரமாக இடம்பெற்றுவருகிறது.

அதற்கான ஏற்பாடுகள் திருகோணமலை சாம்பல் தீவு பிரசேத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டிருக்கிறது.சம்பந்தனின் கோட்டையான திருகோணமலையில் தமிழரசுக் கட்சியின் நீண்டகால உறுப்பினர்களை வெளியேற்றிவிட்டு புதிய உறுப்பினர்களை உள்வாங்கும் நடவடிக்கைகள் மும்முரமாக இடம்பெற்றுவருகிறது.

இதற்கான வேலைகளில் திருகோணமலை மாவட்டத்தின் தமிழரசு கட்சி அமைப்பாளர் குகதாசனுடன் இணைந்து பாராளுமன்ற உறுப்பினர்களான சாணக்கியன் மற்றும் சுமந்திரன் ஆகியோர் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.இதேபோல்,ஏனைய பிரதேசங்களிலும் தமிழரசு கட்சியின் நீண்டகால உறுப்பினர்களுக்கு வெட்டு விழுந்துவருவதாக அறியமுடிகிறது.

தமிழரசு கட்சியின் வளர்ச்சிக்காக நீண்டகாலமாக உழைத்துவந்தவர்களையும் அந்த கட்சியை தங்களுடைய மூச்சாக எண்ணி செயற்பட்டு வந்தவர்களையும் வெளியில் போடுவதால் பலர் அதிருப்தியில் இருப்பதுடன்,தமிழரசு கட்சியின் தலைமைக்கு நெருக்குவாரங்கள் அதிகரித்திருக்கின்றன.

ஏற்கனவே தமிழ் தேசிய கூட்டமைப்பின் உடைவுக்கு சுமந்திரனின் தனிப்பட்ட முடிவுகளும் தனிப்பட்ட தீர்மானங்களுமே காரணம் என பலரும் விமர்சித்துவரும் நிலையில்,இந்த செயற்பாடு தமிழரசுக்கட்சிக்குள் பெரும் தலையிடியாக உருவெடுத்திருக்கிறது.

CATEGORIES
TAGS
Share This