மக்கள் விடுதலை முன்னணியின் எழுச்சியும், பிரதான கட்சிகளின் நடுக்கமும்!

மக்கள் விடுதலை முன்னணியின் எழுச்சியும், பிரதான கட்சிகளின் நடுக்கமும்!

அருண் செல்வராஜ்

JVP எனும் பெயரை சொல்லவும், கேட்டகவும் அஞ்சிய காலப்பகுதிகளை யாரும் சீக்கிரம் மறந்து இருக்க முடியாது ,1983ம் ஆண்டு இனக்கலவரம், எந்த ஒரு சிறுபான்மை இனத்தவராலும் மறந்திருக்க முடியாது, இன்று வரை கருப்பு ஜூலை எனப்படுவது ஏதோ ஒரு பயத்தை எமக்குள் விதைத்து செல்கிறது.

இலங்கையின் இருண்ட யுகமாக இந்த 1983ம் ஆண்டு கலவரம் இன்றளவும் மக்கள் மத்தியில் மறக்க முடியாத நிகழ்வாக காணப்படுகிறது, குறிப்பாக தமிழர்களின் சொத்துக்கள் சூறையாடப்பட்டன, டயர்களை இட்டு கொளுத்தி எரிக்கப்பட்டார்கள் என்பது எல்லாம் வரலாற்றில் மறக்கமுடியா கருப்பு பக்கங்கள்.

இதற்கும் JVP க்கும் உண்மையில் தொடர்பு உண்டா? அல்லது எதோ ஒரு வகையில் தொடர்புபடுத்தப்பட்டதா என்பதை நாம் சிந்திக்க வேண்டிய சூழ்நிலையில் இருக்கிறோம் .2022ம் ஆண்டு காலி முகத்திடல் கலவரத்தையும், 1983ம் ஆண்டு ஜூலை கலவரத்தையும் ஏதோ ஒரு வகையில் JVP மீது திணிக்கப்பட்ட கலவரமாக நான் பார்க்கிறேன் .

1971ம் ஆண்டு கிளர்ச்சி அடுத்து 1977-1983 ம் ஆண்டு கிளர்ச்சி
1987-1989ம் ஆண்டு கிளர்ச்சி எல்லாவற்றிலும் JVP எனும் ஒரே பெயர் இடம் பெற காரணம் என்னவாக இருக்கும் என்று தார்மீக ரீதியில் நோக்குவமேயானால் 2022ம் ஆண்டு காலி முகத்திடல் கலவரத்தினை JVP மீது திணிக்கப்பட்ட வரலாற்றோடு ஒப்பிட்டு பார்க்க வேண்டியுள்ளது .

1971-1989 ஆண்டுகளில் இடம்பெற்ற கலவரங்களில் ஏதோ ஒரு வகையில் JVP யினர் இழுத்து விட்டு இருக்கலாமோ என்று என்ன தோன்றுகிறது .இலங்கை சுதந்திர கட்சி , ஐக்கிய தேசிய கட்சி எனும் இரண்டு ஆலமரங்களுக்கு நடுவே ரோகண விஜயவீர எனும் ஒரு தனி மனிதனின் கம்யூனிச சிந்தாத கொள்கைகளில் ஈர்க்கப்பட்ட இளைஞர்கள் நாடு முழுதும் இடம்பெற்ற கலவரங்களுக்கு காரணமானவர்களாக இருந்திருக்க முடியுமா ? என்றால் நிச்சயமாக இருக்க முடியாது .

உதாரணமாக இந்தியாவின் நாம் தமிழர் கட்சியின் வருகையை போலவே ஒரு காலகட்டத்தில் JVP இருந்திருக்கும் , நான் இரண்டு கட்சிகளின் கொள்கையை ஒப்பிடவில்லை ,ஒரு குறிப்பிட்ட நோக்கத்தில் ஈர்க்கப்பட்ட வாலிபர்கள் ஒன்றிணைந்து ஒரு முழு நாட்டிலும் கலவரத்தை கட்டவிழ்த்து விடுவது சாத்தியமா ? அப்போது விடுதலை புலிகளின் ஆரம்ப காலகட்டம் வேறு ஆக நாட்டின் புலனாய்வு எந்தளவுக்கு இருந்து இருக்கும் .

ஏதோ ஒரு அசம்பாவிதம் நடக்க போகிறது என்பதை அரசு நிச்சயம் அறிந்திருக்க வாய்ப்பு இருந்திருக்கும் , அதை அப்படியே ஆடவிட்டு மக்களை திசை திருப்ப முடிந்த அளவு அரசு இந்த கலவரத்தை பயன்படுத்தி இருக்குமோ என எண்ண தோன்றுகிறது.

அதை கடந்து பலவருட இடைவெளிக்கு பிறகு அதே JVP அனுரகுமார திசாநாயக்க தலைமையில் இன்று பெரும் எழுச்சி பெற்றதுக்கு காலி முகத்திடல் கலவரம் பிரதானமாக காணப்பட்டது .
தன்னிச்சையாக பொதுமக்களால் 100 நாட்களை தாண்டி செய்யப்பட்ட அமைதி வழி போராட்டங்களை அரசாங்கம் குண்டர்களை கொண்டு அடக்கப்பார்த்து அதை JVP மீது திணிப்பதற்கு பெரும் பிரயத்தனம் மேற்கொண்டது . ஆனாலும் சமூக வலைத்தளங்கள் மூலமாக விடயங்கள் ஒளிபரப்பப்பட்டதன் காரணமாக மக்கள் பூரண தெளிவை பெற்று இருந்தனர் , ஆகவே JVP மீது பூசப்பட இருந்த கலவர அடையாளம் தகர்த்து எறியப்பட்டது .

அதன் எழுச்சியே சிங்கள கிராமங்கள் தொட்டு , தலை நகர் வரை JVP எனும் நாமம் ஒலிக்கிறது , சொல்ல போனால் வடக்கு கிழக்கு மற்றும் மலையகம் கூட பரவலாக JVP வர வேண்டும் என்கிற கோசம் இருப்பதை காணலாம் .

ஆனால் தவறியேனும் JVP வந்து விட கூடாது என்று அரசாங்கமும், பிரதான எதிர் கட்சியும் இருப்பது பாராளுமன்ற அமர்வுகளில் காண கூடியதாகவே உள்ளது ,அவ்வாறு JVP இலங்கை அரசியலில் முக்கிய பங்கு வகிக்குமாயின் இதுவரை இலங்கையின் பொருளாதார பிரச்சனைகளுக்கு காரணமானவர்கள் கண்டறியப்பட வாய்ப்புகள் உள்ளதாலும் , ஆளும் தரப்புக்கும் பிரதான எதிர் தரப்புக்கும் இடையில் நட்பு ரீதியான பழக்கம் உள்ளதாலும் , JVP ன் வருகையை பெரும்பான்மை பாராளுமன்ற உறுப்பினர்கள் விரும்புவதாக தெரிய வில்லை .

ஆனாலும் இருக்கிற வாக்கு பலத்தை JVP தக்கவைத்து கொள்ளவேண்டிய நிலை காணப்படுகிறது .அதிகப்படியான ஆர்ப்பாட்டங்கள் JVP மீது மக்களுக்கு அதிருப்தி உண்டாக்கவும் காரணமாக அமைய வாய்ப்புக்கள் உள்ளதை அனுரகுமார உணரவேண்டியது அவசியமாகும் . குறிப்பாக சிங்கள கிராம மக்களின் வாக்கு என்பதும் , பல்கலைக்கழக மாணவர்களின் ஆதரவும் ஒரு குறிப்பிட்ட அளவு JVP கு உயர்வடைந்து உள்ளது , ஆனாலும் கடந்த வார இலங்கை நாணயத்தின் பெறுமதி உயர்வினால் சாதாரண மக்கள் மத்தியில் ஒரு ததும்பல் நிலை உருவாகி உள்ளதை ஏற்று கொள்ளத்தான் வேண்டும் .ஆகவே அது சம்பந்தமான உண்மை நிலையை மக்களுக்கு எடுத்து சொல்லவேண்டியதன் அவசியத்தை JVP உணரவேண்டும் .

பல வருடங்களாக JVP மீது இருந்த கறை தற்போது நீங்கியுள்ள நிலையில் , அரசாங்கம் அந்த நிகழ்வை மக்களுக்கு ஞாபகப்படுத்த பலவாறு எத்தனித்தது , ஆனாலும் முழுமையாக அது கைகூடவில்லை , ஆனாலும் பழமை வாத , அடிப்படை வாத சிங்கள மக்களுக்கு எந்தவகையில் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது என்பது தேர்தல்களுக்கு பின்னரே அறிந்து கொள்ள முடியும்.

ஒரு வேளை குறிப்பிட்ட ஒரு மாதத்திற்குள் தேர்தல் நடத்தப்படும் இருந்தால் JVP வாக்கு வங்கியில் பாரிய பாதிப்புகள் இருக்க வாய்ப்பில்லை , ஆனாலும் அது தவறும் பட்சத்தில் கிராமப்புற விவசாயிகளில் வாக்குகள் குறைய வாய்ப்பு உள்ளது .

கடந்த அரசாங்கம் இழைத்த பாரிய பிழைகளில் ஒன்றுதான் இலங்கை விவசாயத்தில் ஏற்பட்ட பாரிய நட்டம் , உர பிரச்சனை என்பன ஆகும் , ஆகவே அரசாங்கம் அதை நிவர்த்தி செய்ய பெரும்பாலும் முயற்சிகளை எடுத்து வருகிறது, ஆகவே அளவுக்கதிகமான மானியங்கள் வழங்கப்படுமிடத்து அது JVP வாக்குகளில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தும் .

மேலும் தலைநகர் என்பது ஐக்கிய தேசியக்கட்சியின் கோட்டையாகும் , ஆனாலும் கடந்த வார கருத்து கணிப்பில் JVPகான ஆதரவு பெருகியுள்ளது , அதற்கு காரணம் கடந்த காலங்களில் மக்கள்பட்ட துன்பங்களே ஆகும் , ஆனாலும் தற்போதைய ரூபாவின் பெறுமதி ஏற்றம் , பெருவாரியான வியாபாரத்தை நம்பியுள்ள தலை நகர மக்களுக்கு புதிய நம்பிக்கையை ஏற்படுத்தும் , ஆகவே அவர்கள் ஏற்கனவே பழக்கப்பட்ட UNP கட்சியை நாட அதிக வாய்ப்பு உள்ளது.

எனவே தேர்தல்கள் கால தாமதம் என்பது என்னை பொறுத்தமட்டில் JVP வாக்கு வங்கியில் சிறிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது என்பது உண்மையே , இதை எவ்வாறு JVP சமாளிக்க போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம் .
ஆனால் போயிடுகின்ற பெருவாரியான இடங்களை JVP கைப்பற்றுமேயாக இருந்தால் அது எதிர்கால பாராளுமன்ற தேர்தலுக்கு பாரிய சக்தியாகவும் , உறுப்பினர்களை அதிகரிக்க சிறந்த வாய்ப்பாகவும் அமையும் என்பதில் சந்தேகமில்லை.

CATEGORIES
TAGS
Share This