டொலர் பெறுமதியின் வீழ்ச்சியை யாராலும் நிறுத்த முடியாது

டொலர் பெறுமதியின் வீழ்ச்சியை யாராலும் நிறுத்த முடியாது

இந்தியா, சீனா, ரஷ்யா மற்றும் ஈரான் உள்ளிட்ட நாடுகள் அவர்களின் அனைத்து ஏற்றுமதிகளையும் இற்றைக்கு வரை அவர்களின் நிதியில் தான் செய்து வருகின்றனர். சுருங்க சொன்னால் சிங்கப்பூர், இஸ்ரேல் மற்றும் ஜெர்மனிக்கும் இவ்வாறு அவர்களின் உடைய நிதிகளின் ஊடாக மேற்குறிப்பிட்ட நாடுகளுடன் கொடுக்கல் வாங்கல் செய்வதற்கு ஏற்பட்டுள்ளது. ஈரான் இந்த மாத இறுதியின் போது ஆபிரிக்க நாடுகளுடன் அவர்களுடைய பணத்தை கொண்டு கொடுக்கல் வாங்கல்களை ஆரம்பிக்க தீர்மானித்துள்ளது. இவ்வாறு சீனா இந்தியா மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளை எடுத்துக் கொண்டால் உலக பொருள் மற்றும் சேவைகளை பரிமாறும் போது அதிகமான பங்கு இந்த நாடுகளுக்கு உண்டு என்பதை புதிதாக ஒன்றும் கூற வேண்டியது இல்லை. தற்போது இந்த நாடுகளின் ஊடாக மேற்கொள்ளப்படும் எந்த ஒரு கொடுக்கல் வாங்கலும் அமெரிக்க டாலர் கொடுக்கல் வாங்கலுக்காக பயன்படுத்தப் படுகின்ற SWIFT செயல் முறையில் மேற்கொள்ளப்படுவதில்லை.

இதன் காரணமாக தான் டொலர் மிகவும் சீக்கிரமாக தனது மதிப்பை இழந்து கொண்டு வருகின்றது.

இந்நிலையில் தான் இந்தியாவில் RBI ஊடாக இலங்கையுடன் மேற்கொள்ளப்படும் கொடுக்கல் வாங்கல் Vostro/Nostro என்ற கணக்கு முறைகளை நடைமுறைப்படுத்துவதற்கு யோசனை முன்மொழியப்பட்டுள்ளது. ஆனால் இதன் போது ஒரு பிரச்சனை காணப்படுகின்றது. ஆரம்பத்தில் ரஷ்யாவின் MIR மற்றும் சீனாவின் CIPS முறையில் கொடுக்கல்வாங்கல் செய்வதை நிராகரித்து மத்திய வங்கி ஆளுநர் இந்திய ரூபாய் மற்றும் இலங்கை ரூபாயில் கொடுக்கல் வாங்கல்களை செய்து கொள்வதற்கு விருப்பம் தெரிவித்துள்ளார். நாம் இனிவரும் காலங்களில் இந்தியாவுடன் மாத்திரம் தான் கொடுக்கல் செய்ய வேண்டுமென ஒரு தீர்மானத்திற்கு வரப்பட்டுள்ளது. நாம் சீன பொருட்களுக்கு பதிலாக இந்திய பொருட்களை மாத்திரம் தான் பயன்படுத்த வேண்டும் என்று தீர்மானம் எட்டப்படுவதற்கும் வாய்ப்பு இருக்கின்றது. ரஷ்யாவின் கனிய எண்ணெய் இந்தியாவின் ஊடாக
எம்மால் பெற்றுக்கொள்ள முடியும் என மத்திய வங்கி ஆளுனர் நமக்கு தெளிவு படுத்துகின்றார். இந்த விடயம் தமிழ் மக்கள் மத்தியில் பாரிய வரவேற்பை கொண்டு வந்தாலும் சிங்கள மக்கள் இதனை எந்த அளவுக்கு ஏற்றுக் கொள்வார்கள் என்பது சந்தேகமே.

கடந்த காலங்களில் மத்திய வங்கி ஆளுநர் டொலருக்காக அனேக வேலை திட்டங்களை முன்னெடுத்து இருந்தார். ரஷ்யாவின் ரூபல் – ரூபாய் (MIR) கொடுக்கல் வாங்கல் முறையை இலங்கையில் ஆரம்பிப்பதற்கு ரஷ்யாவின் பக்கத்தில் முன்மொழிந்த கோரிக்கையை மத்திய வங்கி ஆளுநர் தான் கலந்துரையாடலுக்கு எடுத்துக் கொள்ளாமலே நிராகரிப்பு செய்தார் என்பது நாம் மறுப்பதற்கு இல்லை. அதைப்போல சீனாவின் பக்கம் முன்வைக்கப்பட்ட யுவான் – ரூபாய் (CIPS) கொடுக்கல் வாங்கல் முறைமைக்கும் மத்திய வங்கி ஆளுநர் இதையே தான் செய்தார். அனேகர் நினைக்கின்றனர் ஜனாதிபதி ரணில் மற்றும் மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் ஆகியோரின் அதிகார பலத்தில் தான் ரூபாவின் பெறுமதி அதிகமாவதின் காரணமாக டொலரின் பெருமதி வீழ்ச்சயடைகின்றது என்று.

ஆனால் மத்திய வங்கிய ஆளுநர் இவ்வாறு கூறுகின்றார் பல்வேறு முயற்சிகளின் பின்னர் தான் இந்த டாலரின் பெருமதி விருச்சி அடைவதை நிறுத்தினேன் என்று. அமெரிக்க பொருளாதார மாதிரியுடன் பிணைந்துள்ள இலங்கையிலுள்ள பெருமளவிலான மக்களுக்கு டொலரின் இருப்பு இல்லாவிடில், தமது இருப்பு குறித்தும் பெரும் பிரச்சினை உள்ளது என்பது தெரியாத விடயமல்ல.

இனி இந்நிலையில் தான் சீனாவுக்கு நிபந்தனைகளை விதித்த சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு கடன் வழங்குவதாக தெரிவித்துள்ளது. 1.5 பில்லியன் ரூபாய் கடன் வழங்குவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. சீன கடனை மறுசீரமைக்கும் வரை இலங்கைக்கு டொலர்களை கடனாக வழங்கமாட்டோம் என ஆரம்பத்தில் கூறிய சர்வதேச நாணய நிதியம் தற்போது சீனாவிடமிருந்து உத்தரவாதம் பெற்றுள்ளதாக கூற ஆரம்பித்துள்ளது.

எது எப்படியோ இந்த டொலரின் முடிவு நந்தலால் தடுக்க முடியாத ஒன்று. இறுதியில், நந்தலால், ஆசியாவின் பொருளாதார ஜாம்பவான்களின் எழுச்சியை எதிர்க்காமல் அதற்கு ஏற்றாற்போல் மாற்றியமைக்க வேண்டும் அல்லது பொருத்தமான ஒருவரிடம் பத‌வியை விட்டுவிட வேண்டும் என்பது மிகத் தெளிவாகத் தெரிகிறது.

ஒரு தேசிய அரசியல்வாதியாக இல்லாத அவருக்கு, உலகில் நடக்கும் மாற்றங்களைப் பற்றிய புரிதல் இல்லை. அவற்றைத் தெரிந்துகொள்ளும் ஆசை அவருக்கு இருக்கிறதா என்பதும் ஐயமே.

அவர் எங்களை டொலரின் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்க முயற்சிக்கிறார். மத்திய வங்கியை அரசாங்கத்தில் இருந்து நீக்கி அதை சுதந்திரமாக (அவர் உட்பட சிலரின் உரிமைக்கு உட்பட்டது) ஆக்க வேண்டும் என்பதே அவரது முக்கிய கோரிக்கையாகும். உண்மையில் இன்றைய உலகில் டொலர் பரிவர்த்தனைகள் வேகமாக குறைந்து வருவதால், டொலர் வீழ்ச்சிக்கு மேல் வீழ்ச்சியாகிறது என்பது உலகில் அன்றாடம் நடக்கும் நிகழ்வுகளைக் கவனிக்கும் அனைவருக்கும் தெரிந்ததே.

எது எப்படி இருந்தாலும் எதிர்காலத்தில் இவர்களது தலையீட்டில் நல்லதோ அல்லது கெட்டதோ பெரிய மாற்றம் வரும் என்று தெரிகிறது. நடக்கும் சம்பவங்களை வைத்து தெள்ள தெளிவாக தெரிகின்றது.

CATEGORIES
Share This