நாளை நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாம் அமர்வு!

நாளை நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாம் அமர்வு!

2023- 24 ஆம் ஆண்டுக்கான நாடாளுமன்ற மத்திய பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு நாளை திங்கள்கிழமை (மார்ச் 13) தொடங்கி ஏப்ரல் 6 வரை நடைபெற உள்ளது.

2023- 24 ஆம் ஆண்டுக்கான நாடாளுமன்ற மத்திய பட்ஜெட் கூட்டத்தொடர் ஜனவரி 31 ஆம் திகதி தொடங்கி ஏப்ரல் 6 வரை 27 அமர்வுகளுடன் 66 நாட்களுக்கு நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. பெப்ரவரி 14 முதல் மார்ச் 12 வரை விடுமுறை அறிவிக்கப்பட்டது.

நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஆற்றிய உரையுடன், நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடர் ஜனவரி 31 ஆம் திகதி தொடங்கியது. தொடர்ந்து பெப்ரவரி 1 ஆம் திகதி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.

நாடாளுமன்ற கூட்டத்தொடரின் முதல் அமர்வு பெப்ரவரி 13ஆம் திகதி வரை நடைபெற்றது. இந்த காலகட்டத்தில், மொத்தம் 10 அமர்வுகள் நடைபெற்றன. முதல் அமர்வின் போது, குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மற்றும் 2023-24 மத்திய பட்ஜெட் மீதான விவாதங்கள் நடைபெற்றது.

இந்நிலையில், பல்வேறு அமைச்சகங்கள் மற்றும் துறைகளின் மானியங்களுக்கான கோரிக்கைகளை துறை தொடர்பான நாடாளுமன்ற நிலைக்குழுக்கள் ஆய்வு செய்த ஒரு மாத கால இடைவெளிக்குப் பிறகு, நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாம் அமர்வு நாளை திங்கள்கிழமை (மார்ச்.13) தொடங்குகிறது. இரண்டாவது அமர்வு மொத்தம் 17 அமர்வுகளைக் கொண்டிருக்கும் மற்றும் அடுத்த மாதம் 6 ஆம் திகதி வரை நடைபெறும்.

CATEGORIES
TAGS
Share This