

எல்லைமீறிய குற்றச்சாட்டில் 16 தமிழக கடற்தொழிலாளர்கள் கைது!
தமிழக கடற்தொழிலாளர்கள் 16 பேரை, இரண்டு விசைப்படகுகளுடன் இலங்கை கடற்படையினர் சிறைப்பிடித்துள்ளனர்.
இந்திய கடல் எல்லையான நெடுந்தீவை அடுத்த அனலைத்தீவு அருகே கடற்தொழிலாளர்கள் மீன் பிடித்த போது மயமத்தில் ங்கு வந்த இலங்கை கடற்படையினர் இரண்டு படகுகள் உட்பட கடற்தொழிலாளர்களை சிறைப்பிடித்துள்ளனர்.
அத்துடன் அவர்களின் வலைகளையும் அறுத்து சேதப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மேலும் கடற்தொழிலாளர்களையும் சரமாரியாக தாக்கி விரட்டி அடித்துள்ளனர்.
இதேபோல் நாகப்பட்டினத்தில் இருந்து மீன்பிடிக்க சென்ற மற்றொரு விசைப்படகையும் சிறைப்பிடித்த இலங்கை கடற்படையினர் அதிலிருந்த 12 கடற்தொழிலாளர்களையும் கைது செய்தனர்.
கைதான 16 பேர் மீதும் எல்லைதாண்டி வந்ததாக கூறி வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் அவர்களை இலங்கையில் உள்ள பருத்தித்துறை கடற்படை முகாமுக்கு கொண்டு சென்றனர். தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.