இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு 500ஐ தாண்டியது!

இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு 500ஐ தாண்டியது!

இந்தியாவில் சில மாநிலங்களில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருகிறது என இந்தியச் செய்திகள் தெரிவிக்கின்றன.

இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை இன்று வெளியிட்ட அறிக்கையில், காலை 8 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 524 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறியுள்ளது.

கடந்த 9ஆம் திகதி பாதிப்பு 379 ஆக இருந்தது. சுமார் 3 மாதங்களுக்கு பிறகு தினசரி பாதிப்பு கடந்த 10 ஆம் திகதி 400ஐ தாண்டி இருந்தது. அதாவது அன்று ஒரே நாளில் 441 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டு இருந்தது.

நேற்று பாதிப்பு 456 ஆக உயர்ந்தது. இந்நிலையில் இன்றும் பாதிப்பு அதிகரித்துள்ளது. கடந்த நவம்பர் 19 ஆம் திகதி பாதிப்பு 556 ஆக இருந்தது. அதன் பிறகு தற்போது மீண்டும் 500ஐ தாண்டி உள்ளது.

CATEGORIES
TAGS
Share This