சகல எதிர்கட்சிளும் ஒன்றிணைத்து போராட வேண்டும்; விஜித ஹேரத் அழைப்பு

சகல எதிர்கட்சிளும் ஒன்றிணைத்து போராட வேண்டும்; விஜித ஹேரத் அழைப்பு

அறிவிக்கப்பட்ட திகதியில் உள்ளூராட்சித் தேர்தல் இடம்பெறுமா அல்லது அரசாங்கத்தின் நோக்கத்திற்கு அமைய தேர்தல் பிற்போடப்படுமா என்ற சந்தேகம் காணப்படுவதாக விஜித ஹேரத் தெரிவித்தார்.

ஆகவே வாக்குரிமையை பாதுகாக்க சகல எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைத்து போராட்டத்தில் ஈடுபட வேண்டும் என என நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் அழைப்பு விடுத்தார்.

அதற்கான ஆரம்பக்கட்ட நடவடிக்கைளை கடந்த 9 ஆம் திகதி ஆரம்பித்துள்ளதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் குறிப்பிட்டுள்ளார்.

தேர்தலை பிற்போட ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேற்கொண்ட அனைத்து நடவடிக்கைகளுக்கும் நீதிமன்றம் முற்றுப்புள்ளி வைத்துள்ளதாக குறிப்பிட்டார்.

இருப்பினும் தற்போது நாடாளுமன்ற சிறப்புரிமையை குறிப்பிட்டுக் கொண்டு ஆளும் தரப்பினர்கள் தேர்தலுக்கு தடையேற்படுத்த முயற்சிப்பதாக விஜித ஹேரத் குற்றம் சாட்டினார்.

CATEGORIES
TAGS
Share This