திடீரென யாழ். சென்ற வசந்த முதலிகே குழு!; பல்வேறு தரப்புக்களுடன் இன்று சந்திப்பு

திடீரென யாழ். சென்ற வசந்த முதலிகே குழு!; பல்வேறு தரப்புக்களுடன் இன்று சந்திப்பு

அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் வசந்த முதலிகே உள்ளிட்ட 6 பேர் கொண்ட குழுவினர் யாழ்ப்பாணத்துக்குத் திடீரென வருகை தந்துள்ளனர்.

இந்தக் குழுவினர் இன்று காலை 11 மணிக்கு யாழ்ப்பாணத்திலுள்ள தனியார் விடுதியில் யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியப் பிரதிநிதிகளைச் சந்தித்துக் கலந்துரையாடவுள்ளனர்.

அதனைத் தொடர்ந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கப் பிரதிநிதிகள் மற்றும் சிவில் சமூகத்தினரையும் சந்தித்துப் பேச்சு நடத்தவுள்ளனர்.

அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் உறுப்புரிமையை யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் பெற்றிருக்காத நிலையிலும் இந்தச் சந்திப்பு இடம்பெறவுள்ளது.

கொழும்பில் தொடர்ச்சியாக அரசுக்கு எதிரான போராட்டங்களை முன்னெடுக்கும் இந்தக் குழுவினர் திடீரென யாழ்ப்பாணம் வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

CATEGORIES
TAGS
Share This