லாலு பிரசாத் மகள்கள் வீடுகளில் ரூ.70 லட்சம் – தங்க நகைகள் பறிமுதல்!

லாலு பிரசாத் மகள்கள் வீடுகளில் ரூ.70 லட்சம் – தங்க நகைகள் பறிமுதல்!

லாலு பிரசாத் யாதவ் மனைவி ராப்ரிதேவி, அவரது மகனும் பீகார் துணை-முதலமைச்சருமான தேஜஸ்வி யாதவ் மற்றும் லாலுவின் 3 மகள்கள் வீடுகள் அவர்களுக்கு சொந்தமான 24 இடங்களில் அதிரடி சோதனைகள் இன்று நடந்தது.

இந்த சோதனையில் லாலு பிரசாத் யாதவ் மகள்கள் வீடுகளில் இருந்து ரூ.70 லட்சம் ரொக்கப்பணம், 1 கிலோ தங்க நகைகள், 540 கிராம் தங்க கட்டிகள் மற்றும் வெளிநாட்டு பணம் ஆகியவை கைப்பற்றப்பட்டு உள்ளதாக இந்தியச் செய்திகள் தெரிவிக்கின்றன.

லாலு பிரசாத் யாதவ் ரயில்வே அமைச்சராக இருந்தபோது ரயில்வே பணியில் சேர அவரது குடும்பத்தினர் பெயரில் நிலம் லஞ்சமாக பெற்றது தொடர்பாக சி.பி.ஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

CATEGORIES
TAGS
Share This