தமிழ் மக்கள், பல்கலை மாணவர்களின் வாக்குகளை அபகரிக்க நீலிக்கண்ணீர் வடிக்கும் ஜே.வி.பி.!

தமிழ் மக்கள், பல்கலை மாணவர்களின் வாக்குகளை அபகரிக்க நீலிக்கண்ணீர் வடிக்கும் ஜே.வி.பி.!

பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் தமிழ் மக்களின் வாக்குகளை பெற்றுக் கொள்வதற்காக ஜே.வி.பி. தற்போது நீலிக்கண்ணீர் வடிப்பதாக குற்றஞ்சாட்டிய ஐக்கிய சோசலிசக் கட்சி பொதுச் செயலாளர் சிறிதுங்க ஜயசூரிய – ஜே.வி.பி. மஹிந்த ராஜபக்ஷவின் பங்காளிகளே என குற்றஞ்சாட்டினர்.

யாழ் ஊடக அமையத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பிலே அவர் இதனை தெரிவித்தார்.மேலும் தெரிவிக்கையில், இராணுவத்தினருக்கு ஆட்களை திரட்டி தமிழ் மக்களுக்கு எதிராக யுத்தத்தை மேற்கொள்வதற்கான அடித்தள வேலைகளை ஜே.வி.பியே செய்தது.

இன்று தமிழ் மக்கள் மற்றும் பல்கலைக்கழக மாணவர்களின் வாக்குகளை அபகரிப்பதற்காக போலியான கதைகளையும் நீலிக்கண்ணீரும் வடிக்கின்றனர் – என்றார்.

CATEGORIES
Share This