திடீரென தீப்பிடித்து எரிந்த பேருந்து ; நடத்துனர் பலி!

திடீரென தீப்பிடித்து எரிந்த பேருந்து ; நடத்துனர் பலி!

கர்நாடக மாநிலம் பெங்களூருவின் லிங்கதீரனஹள்ளி பகுதியில் உள்ள பேருந்து நிறுத்தத்தில், நேற்று இரவு அரசு போக்குவரத்துக் கழக பேருந்தை நிறுத்தி வைத்திருந்த போது தீப்பற்றி எரிந்ததில் நடத்துனர் பலியானார்.

சாரதி பிரகாஷ் அங்குள்ள ஓய்வு அறையில் தூங்கினார். நடத்துனர் முத்தையா சுவாமி பேருந்தினுள் தூங்கினார். இந்நிலையில் அதிகாலை 4.45 மணியளவில் பேருந்து திடீரென தீப்பற்றி எரிந்தது. உள்ளே தூங்கிக்கொண்டிருந்த நடத்துனர் முத்தையா சுவாமி வெளியேறுவதற்குள் தீ மளமளவென பரவியது. இதுபற்றி தகவல் அறிந்த தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு வந்து தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் பலத்த காயமடைந்த முத்தையா சுவாமி, பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. தீவிபத்துக்கான காரணம் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

CATEGORIES
TAGS
Share This