ஆப்கானில் தற்கொலைப்படை தாக்குதலில் ஆளுநர் படுகொலை!

ஆப்கானில் தற்கொலைப்படை தாக்குதலில் ஆளுநர் படுகொலை!

பால்க் மாகாணத்தின் ஆளுநர் அலுவலகத்தில் ஐஎஸ் அமைப்பின் தற்கொலைப்படை பயங்கரவாதி புகுந்து தன் உடலில் கட்டியிருந்த வெடிகுண்டை வெடிக்கச் செய்தார். இந்த கொடூர தாக்குதலில் ஆளுநர் முகமது தாவூத் முஜமில் கொல்லப்பட்டார்.

அவருடன் மேலும் இருவர் பலியாகியுள்ளனர். சிலர் காயமடைந்துள்ளனர். தலிபான் ஆட்சிக்கு வந்தபிறகு கொல்லப்பட்ட மூத்த தலிபான் அதிகாரி முகமது தாவூத் முஜமில் ஆவார். இவர் இதற்கு முன்பு கிழக்கு மாகாணமான நங்கர்ஹரின் ஆளுநராக பதவியில் இருந்தபோது ஐ.எஸ். அமைப்புக்கு எதிரான போரை வழிநடத்தினார். கடந்த அக்டோபர் மாதம் அவர் பால்க் மாகாணத்திற்கு மாற்றப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

CATEGORIES
TAGS
Share This