

மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி சர்ச்சை பேச்சு!
கர்நாடகா மாநிலம் ஹஸ்சன் மாவட்டத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய மத்திய பாராளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி சர்ச்சைக்குறிய கருத்தை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது:- கர்நாடக சட்டசபை தேர்தலை முன்னிட்டு இலவச மின்சாரம் தருவதாக காங்கிரஸ் வாக்குறுதி அளித்துள்ளது. காங்கிரஸ் இலவச மின்சாரம் தருவார்கள் என்று நீங்கள் நம்புகிறீர்களா? அவர்களின் ஆட்சிக் காலத்தில் மின்சாரம் கொடுக்கவே இல்லை.
கிராமங்களில் மின்சாரம் இருந்ததில்லை. பிரதமர் மோடி ஆட்சிக்கு வந்த பிறகு, எங்களால் (பாஜக) 24 மணி நேர மின்சாரம் வழங்க முடிந்தது. கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சியின்போது போதிய அளவு மின்சாரம் வழங்கப்படவில்லை. அதனால் மக்கள் தொகை அதிரித்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
CATEGORIES இந்தியா