தட்டுப்பாடாக உள்ள மருந்துகளை வழங்கத்தயார்

தட்டுப்பாடாக உள்ள மருந்துகளை வழங்கத்தயார்

வைத்தியசாலைகளில் தட்டுப்பாடாக உள்ள மருந்துகளின் பட்டியல் இருப்பின் அவற்றை வழங்குவதற்கு தயார் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று வெள்ளிக்கிழமை உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

பல அத்தியாவசிய மருந்துகளுக்கு தட்டுப்பாடு நிலவுவதாகவும், புற்றுநோய், இதய நோய், உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு, கல்லீரல் நோய் போன்றவற்றுக்கான உயிர்காக்கும் மருந்துகளுக்கு மருத்துவமனை அமைப்பில் கடும் தட்டுப்பாடு நிலவுவதாகவும் அவர் கூறியுள்ளார்.

அத்தியாவசிய உயிர்காக்கும் உபகரணங்களுக்கு பாரிய தட்டுப்பாடு நிலவுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

தற்போது வைத்தியசாலைகளில் மருந்துகள் மற்றும் உபகரணங்களுக்கு பாரிய தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும், பல முக்கிய சத்திரசிகிச்சைகள் தாமதமாகி வருவதாகவும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.

CATEGORIES
TAGS
Share This