1000 ஆண்டு பழமையான தங்க புதையல் நெதர்லாந்தில் கண்டுபிடிப்பு!

1000 ஆண்டு பழமையான தங்க புதையல் நெதர்லாந்தில் கண்டுபிடிப்பு!

நெதர்லாந்து நாட்டை சேர்ந்த வரலாற்று ஆராய்ச்சியாளர் லோரென்சோ ருய்டர். இவர் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு ஹூக்வுட் பகுதியில் இருந்து 1000 ஆண்டு பழமையான தங்க புதையலை கண்டுபிடித்தார்.

இதனை டச்சு தேசிய தொல்பொருள் ஆய்வகம் தெரிவித்து உள்ளது. அந்த புதையலில் 4 தங்க காது பதக்கங்கள், 2 தங்க இலைகள், 39 வெள்ளி நாணயங்கள் என ஏராளமான பொருள்கள் இருந்தன. இதுபற்றி லோரென்சோ ருய்டர் கூறும்போது,

10 வயதில் இருந்தே வரலாற்று ஆராய்ச்சியில் ஆர்வம் ஏற்பட்டது. அதன்பின்னர் நான் இந்த துறையிலேயே தொடர்ந்து ஈடுபட்டேன். அப்போதுதான் கடந்த 2021ஆம் ஆண்டு வடக்கு நகரமான ஹூக்வூடில் மெட்டல் பகுதியில் புதையல் இருக்கலாம் என தோன்றியது.

அந்த நிலத்தை டிராக்டர் கொண்டு தோண்டினேன். அங்கு பழமையான கலை பொருட்கள் கிடைத்தன. அவை ஆயிரம் ஆண்டுகள் பழமையானதாக இருக்கும் என்று கருதுகிறேன், என்றார். நெதர்லாந்து நாட்டில் தற்போது தான் இதுபோன்ற தங்க நகைகள் கிடைத்துள்ளன என்று அருங்காட்சியக அதிகாரிகள் தெரிவித்தனர்.

CATEGORIES
TAGS
Share This