உள்ளூராட்சி மன்ற தேர்தலை தாமதமின்றி நடத்த வேண்டும்; ஜனாதிபதிடம் கோரிக்கை!

உள்ளூராட்சி மன்ற தேர்தலை தாமதமின்றி நடத்த வேண்டும்; ஜனாதிபதிடம் கோரிக்கை!

நாட்டின் ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்துவதற்காக உள்ளூராட்சி மன்ற தேர்தலை தாமதமின்றி நடத்த வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

புத்தசாசன நிறைவேற்றுக் குழுவினால் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதத்திலேயே இவ்வாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அமைச்சர்களின் எண்ணிக்கையை 15 ஆக மட்டுப்படுத்தி இராஜாங்க அமைச்சர்களை நீக்குதல், அமைச்சுகளின் நிர்வாகத்தை செயலாளர்களின் கீழ் கொண்டு வருவதுடன், அரச நிகழ்வுகள் அனைத்தையும் இரத்து செய்தல்,

சகல ஆடம்பரப் பொருட்களின் இறக்குமதியையும் நிறுத்தி, அமைச்சுத் திணைக்களங்கள் உள்ளிட்ட அனைத்து அரச நிறுவனங்களிலும் தற்போது மேற்கொள்ளப்படும் அத்தியாவசியமற்ற செலவுகளை குறைப்பதற்கு நடவடிக்கை எடுத்தல் போன்றவற்றின் மூலம் தேர்தலுக்கான நிதியை சேமிக்க முடியும் என புத்தசாசன நிறைவேற்றுக் குழு குறிப்பிட்டுள்ளது.

CATEGORIES
TAGS
Share This