மீண்டும் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு!

மீண்டும் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு!

கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்துள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

சென்னை சைதாப்பேட்டையில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் காய்ச்சல் தடுப்பு முகாமை தொடக்கி வைத்தார். தொடர்ந்து செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்ததாவது:

தமிழகம் உட்பட நாடு முழுவதும் ஒமைக்ரான் வகை கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. ஒரு மாதத்துக்கு முன் 2 பேருக்கு மட்டுமே இருந்த கொரோனா தற்போது 20 பேருக்கு மேல் அதிகரித்துள்ளது.

ஒமைக்ரான் வகை கொரோனா அதிகரித்தாலும் அதனால் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படுவதில்லை. இதனால் பதட்டம் கொள்ள தேவையில்லை.

பொது இடங்களில் முகக்கவசம் அணிதல், தனிமனித இடைவெளி ஆகியவற்றை பின்பற்றுவது நல்லது. கொரோனா தடுப்பு விதிமுறைகளைப் பின்பற்றினாலே இன்ஃப்ளூயன்ஸா தொற்று பாதிப்புகளில் இருந்து தற்காத்துக் கொள்ள முடியும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

CATEGORIES
TAGS
Share This