மட்டக்களப்பு பழங்குடி மக்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்தல்

மட்டக்களப்பு பழங்குடி மக்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்தல்

மட்டக்களப்பு மாவட்டத்தில் வாழ்கின்ற பழங்குடி மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்துவதற்கு நாம் மனிதர்கள் கட்சி திடசங்கற்பம் பூண்டுள்ளது.

இம்மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்துவதற்கு பொது அமைப்பு ஒன்று தூரநோக்கு வேலைத் திட்டங்களுடன் முன்வந்துள்ள இதுவே முதலாவது சந்தர்ப்பம் ஆகும்.

நாம் மனிதர்கள் கட்சியின் சர்வதேச விவகார செயலாளரான நஸீர் சேகு தாவூத். அவரால் முடிந்த வகையில் தனிப்பட்ட முறையில் நீண்ட காலமாக இம்மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்த பாடுபடுகின்றார்.

இந்நிலையில், சுகாதார விழுமியம் மற்றும் கல்வி உரிமை ஆகியவற்றின் ஊடாக இம்மக்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்த முடியும் என்று நாம் மனிதர்கள் கட்சியின் பொது செயலாளர் ஹாரிஸ் அல் உதுமா லெப்பைக்கு இவர் கடந்த நாட்களில் அறிக்கையிட்டுள்ளார்.

குறிப்பாக சுகாதார விழுமியத்தை பொறுத்த வரை இம்மக்கள் மத்தியில் காலணி பாவனை கிடையாது, குறைந்த பட்சம் செருப்புகூட பாவிப்பது இல்லை, விழிப்பூட்டல் மற்றும் அறிவூட்டல் நடவடிக்கைகளை மேற்கொண்டு, இவர்கள் மத்தியில் காலணி பாவனையை ஊக்குவிக்க நாம் மனிதர்கள் கட்சி தயாராகி உள்ளது.

அதேபோல கல்வி உரிமையை பொறுத்த வரை இவர்களுடைய வாழ்விட பிரதேசங்களில் பாடசாலைகள் கிடையாது. பல மைல் தூரங்கள் நடந்துதான் இவர்களுடைய பிள்ளைகள் பாடசாலைகளுக்கு செல்ல வேண்டியுள்ளது.

பெற்றோர் பல தூர இடங்களுக்கு வேலைகளுக்கு செல்ல வேண்டி உள்ளது. பிள்ளைகளை பராமரிக்க ஆட்கள் இல்லாததால் உடன் கொண்டு செல்கின்றனர். இதனால் பிள்ளைகளின் படிப்புத் தடைப்படுகின்றது. குழந்தை தொழிலாளர்களாக இப்பிள்ளைகள் மாறுகின்ற வாய்ப்பு ஏற்படுகின்றது.

இவற்றை கருத்தில்கொண்டு, இப்பிள்ளைகளின் பாடசாலை இடைவிலகல்களை தடுத்து நிறுத்தவும், இப்பிள்ளைகள் பாடசாலைகளில் தங்கிப் படிக்கவும் ஏற்பாடுகளை செய்து கொடுப்பதற்கும் நாம் மனிதர்கள் கட்சி முன்வந்துள்ளது.

CATEGORIES
TAGS
Share This