

இந்தியாவிற்குள் ஊடுருவ முயன்ற பங்காளதேசத்தை சேர்ந்த நபர் கைது!
சர்வதேச எல்லை வழியாக இந்தியாவுக்குள் ஊடுருவ முயன்ற பங்காளதேசத்தைச் சேர்ந்த நபரை எல்லைப் பாதுகாப்புப் படையினர் கைது செய்துள்ளனர்.
பஞ்சாபின் அமிர்தசரஸ் செக்டாரில் உள்ள எல்லைப் பகுதியான ரஜதல் பகுதியில் நேற்று நள்ளிரவில் அந்த நபர் ஊடுருவ முயன்றுள்ளார். அப்போது, பணியில் இருந்த பாதுகாப்பு படையினர் அந்த நபரை துப்பாக்கியால் சுட்டனர். பின்னர் கைது செய்தனர்.
இதுதொடர்பாக நடத்திய முதற்கட்ட விசாரணையில், கைது செய்யப்பட்ட நபர் பங்காளதேசத்தை சேர்ந்தவர் என்று தெரிவித்தார். மேலும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அதன் பிறகு அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் செய்தித் தொடர்பாளர் கூறினார்.
CATEGORIES இந்தியா