குலத்தை கெடுக்கின்ற கோடரிக்காம்பு – டக்ளஸ் தேவானந்தா

குலத்தை கெடுக்கின்ற கோடரிக்காம்பு – டக்ளஸ் தேவானந்தா

கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா குலத்தை கெடுக்கின்ற கோடரிக்காம்பு என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வராசா கஜேந்திரன் இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். SamugamMedia

வடக்கு மாகாணத்தில் இந்திய மீனவர்கள் தொழில் செய்வதற்கு அனுமதி வழங்கப்படவுள்ளதாகவும் இதனை தாம் ஒருபோதும் அனுமதிக்கபோவதில்லை என்றும் கஜேந்திரன் எதிர்ப்பினை வெளியிட்டிருந்தார். SamugamMedia

இன்று நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சியினால் கொண்டுவரப்பட்ட சர்வஜன வாக்குரிமை தொடர்பான பிரேரணை மீதான ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்திருந்தார். SamugamMedia

இலங்கை அரசாங்கத்துடன் இணைந்து தமிழ் மக்களின் பொருளாதாரத்தை அழிப்பதற்கு கடற்தொழில் அமைச்சர் முயற்சிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். SamugamMedia

மயிலத்த மடுவிலே மாதுறு ஓயா அபிவிருத்தி திட்டத்தின் கீழ் சிங்களமயப்படுத்தும் நோக்கத்துடன் தமிழ் பண்ணையாளர்கள் தொடர்சியாக தாக்;கப்படுவதாகவும் தமிழ் பண்ணையார்களின் கால்நடைகளும் தொடர்ச்சியாக அழிக்கப்படுவதாகவும் இவ்வாறான அரசாங்கத்தின் செயற்பாடுகளை வன்மையாக கண்டிப்பதாக கஜேந்திரன் குறிப்பிட்டிருந்தார்.

CATEGORIES
TAGS
Share This