3 பிள்ளைகளுக்கு விஷமூட்டி தன்னுயிரையும் மாய்க்க முயன்ற தந்தை!

3 பிள்ளைகளுக்கு விஷமூட்டி தன்னுயிரையும் மாய்க்க முயன்ற தந்தை!

தனது மூன்று பிள்ளைகளுக்கு விஷம் கொடுத்ததுடன், தனது உயிரையும் மாய்த்துக் கொள்ள தந்தையொருவர் முயற்சியத்த சம்பவமொன்று கம்பளை – நெத்தபிட்டிய பிரதேசத்தில் பதிவாகியுள்ளது.

பாதிக்கப்பட்டவர்கள் தற்போது கம்பளை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதுடன், அவர்களின் நிலைமை கவலைக்கிடமாக இல்லை என வைத்தியசாலை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

நான்கு வயது மகள், 7 மற்றும் 14 வயது மகன்களுக்கே தந்தை விஷம் கொடுத்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

மனைவியுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக தந்தை தனது பிள்ளைகளுக்கு விஷம் கொடுத்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.


நீங்கள் அல்லது உங்களுக்குத் தெரிந்த ஒருவர் நெருக்கடியில் இருந்தால் மற்றும் உதவி தேவைப்பட்டால் அழைக்கவும்

– தேசிய மனநல உதவி எண் 1926

– சுமித்ரயோ: 011 2 682535 / 011 2 682570

– துரித அழைப்பு: 1333 (கட்டணம் இல்லை)


CATEGORIES
TAGS
Share This