தோல்வியில் முடிந்த ஜப்பானின் ஏவுகணை சோதனை!

தோல்வியில் முடிந்த ஜப்பானின் ஏவுகணை சோதனை!

சுமாா் 20 ஆண்டுகளுக்குப் பிறகு ஜப்பான் உருவாக்கியுள்ள புதிய வரிசை ஏவுகணையான ஹெச்3-ஐ முதல்முறையாக விண்ணில் செலுத்தும் முயற்சி செவ்வாய்க்கிழமை தோல்வியடைந்தது.

ஏற்கெனவே 3 வாரங்களுக்கு முன்னா் வேறொரு கோளாறு காரணமாக அந்த ஏவுகணையை செலுத்தும் திட்டம் ஒத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில், ஜப்பான் விண்வெளி ஆய்வு மையத்தால் செவ்வாய்க்கிழமை செலுத்தப்பட்ட ஹெச்3 ஏவுகணையின் இரண்டாவது நிலையில் பழுது ஏற்பட்டதால் அது மனிதா்கள் வசிக்கும் பகுதியில் விழும் ஆபத்தை தவிா்ப்பதற்காக வேண்டுமென்றே வெடித்து சிதறடிக்கப்பட்டது.

இது குறித்து ஜப்பான் விண்வெளி ஆய்வு மையம் கூறுகையில், ‘ஹெச்3 ஏவுகணையின் இரண்டாம் நிலைத் தொகுதியில் இக்னிஷன் செயல்படாததால் அது திட்டமிட்ட பாதையில் செலுத்த முடியாதது உறுதியானது. அதையடுத்து, அந்த ஏவுகணை வெடித்து சிதறடிக்கப்பட்டது. 2ஆம் நிலை ஏவுகணையும், அது எடுத்துச் சென்ற செயற்கைக்கோளும் பிலிப்பின்ஸ் அருகே ஆழ்கடல் பகுதியில் பாதுகாப்பாக விழுந்தன’ என்று தெரிவித்தது.

இந்தத் தோல்வி ஜப்பானிய விண்வெளி ஆய்வு ஆா்வலா்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது.

CATEGORIES
TAGS
Share This