

வடக்கு மாகாண மீனவர்கள் பிச்சை எடுக்கின்றனர்; டக்ளஸ் – ரணிலை கழுவிய கஜேந்திரகுமார்!
தமிழ் மக்களின் இனப்பிரச்சனையை தீர்ப்பதற்கு சர்வ கட்சி அரசாங்கதை கூட்டி தனது சமாதான நல்லெண்ணத்தை காட்டுவது போன்ற மாயையின் மூலம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தனது
நற்பெயரை காப்பாற்ற முயற்சிப்பதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் சபையில் குற்றம் சுமத்தியிருந்தார்.
ஆனால், கிழக்கு மாகாணத்தில் குருந்தூர் மலையில் நீதிமன்றத்தின் கட்டளையை மீறி பௌத்த விகாரை கட்டி அங்கு அனைத்து விடயங்களும் பூரணமாக நிறைவடைந்து விட்டத்தகவும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் குறிப்பிட்டுள்ளார்.
குருந்தூர் மலையில் பௌத்த வழிபாட்டு தளங்களை அமைக்கப்படுவதை ஒருபுறம் வைத்தாலும் அங்கு பௌத்த மக்கள் எவரும் இல்லை என தெரிவித்த கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தமிழர்களும் பௌத்தர்களாக வாழ்ந்திருந்ததாக குறிப்பிட்டிருந்தார்.
குறிப்பாக, வடக்கு மாகாண மீனவர்கள் பிச்சை எடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும் ஆனால் கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இந்திய மீனவர்கள் வடபகுதிய கடற்பரப்பில் மீன்பிடிப்பதற்கான அனுமதியை வழங்க நடவடிக்கை எடுத்துள்ளதாக குற்றம் சுமத்தியுள்ளார்.
இந்த அனுமதி முறையை வன்மையாக கண்டிப்பதாக தெரிவித்த கஜேந்திரகுமார் பொருளாதார ரீதியில் அவதானிக்கின்ற போது தமிழர்களுக்கான உரிமைகள் மறுக்கப்படுவதாகவும் இந்த அரசாங்கம் இன ரீதியிலான மக்களை சுத்திகரிப்பதாகவும் தொடர்ந்து இனவாத செயற்பாடுகளே இடம்பெறுவதாக அவர் குறிப்பிட்டிருந்தார்.