உள்ளூராட்சி சபைத் தேர்தலில் நாமே வெல்வோம்; மஹிந்த அணி மீண்டும் உறுதி!

உள்ளூராட்சி சபைத் தேர்தலில் நாமே வெல்வோம்; மஹிந்த அணி மீண்டும் உறுதி!

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குத் தற்போது கிராமங்களுக்குச் செல்ல முடிகின்றது. உள்ளூராட்சி சபைத் தேர்தலில் நிச்சயம் நாம் வெற்றி பெறுவோம் என ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். சந்திரசேன தெரிவித்தார்.

மொட்டு கட்சி தலைமையகத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“வரிசை யுகத்தால் எமக்குக் கிராமங்களுக்கு செல்ல முடியாதிருந்தது. தற்போது வரிசை யுகம் இல்லை. உரப்பிரச்சினை இல்லை. சர்வதேச நாணய நிதியம் கடன் வழங்கவுள்ளது. எனவே, நாடு நெருக்கடியில் இருந்து மீளும். இதனை விரும்பாத சிலரே அரசின் திட்டத்தைச் சீர்குலைக்க முற்படுகின்றனர். உள்ளூராட்சி சபைத் தேர்தல் நடக்குமா? இல்லையா? என்பது தெரியாது. தேர்தல் நடந்தால் அதில் நிச்சயம் வெற்றி பெறுவோம்” – என்றார்.

CATEGORIES
TAGS
Share This