திகார் சிறையில் மற்ற கைதிகளுடன் அடைக்கப்பட்ட முன்னாள் துணை முதல்வர்!

திகார் சிறையில் மற்ற கைதிகளுடன் அடைக்கப்பட்ட முன்னாள் துணை முதல்வர்!

முன்னாள் டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா, மதுபான கொள்கை ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

மூத்த குடிமகன் என்ற முறையில் ஒரு தனி நபருக்கான சிறை எண்1க்குள் மணீஷ் சிசோடியா அடைக்கப்படுவார் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். சிறைக்கு பகவத் கீதை, கண்ணாடி மற்றும் மருந்துகளை கொண்டு செல்ல மணீஷ் சிசோடியாவிற்கு நீதிமன்றம் அனுமதி அளித்தது.

மேலும், விபாசனா தியானம் செய்ய அனுமதிக்க வேண்டும் என்ற அவரது கோரிக்கையை பரிசீலிக்குமாறும் திகார் அதிகாரிகளுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில் மணீஷ் சிசோடியா திகார் சிறையில் மற்ற கைதிகளுடன் அடைக்கப்பட்டுள்ளதாகவும், அவருக்கு ‘விபாசனா’ சிறை மறுக்கப்படுவதாகவும் ஆம் ஆத்மி கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளர் சவுரப் பரத்வாஜ் குற்றம் சாட்டியுள்ளார்.

இதுகுறித்து பரத்வாஜ் மேலும் கூறுகையில்,

” மணீஷ் சிசோடியாவை சிறையின் விபாசனா அறையில் வைக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது. அதற்கு நீதிமன்றமும் ஒப்புதல் அளித்தது. நீதிமன்றத்தின் அனுமதி இருந்தபோதிலும், சிறை எண் 1ல் குற்றவாளிகளுடன் சிசோடியா வைக்கப்பட்டுள்ளனர். இதற்கு மத்திய அரசு பதில் அளிக்க வேண்டும்” என்றார்.

CATEGORIES
TAGS
Share This