சுகாதார தொழிற்சங்கங்கள் பணிப்பகிஷ்கரிப்பு; வைத்திய சேவைகள் பாதிப்பு

சுகாதார தொழிற்சங்கங்கள் பணிப்பகிஷ்கரிப்பு; வைத்திய சேவைகள் பாதிப்பு

சுகாதார தொழிற்சங்கங்கள் முன்னெடுத்துள்ள பணிப்புறக்கணிப்பு போராட்டத்தினால் வைத்தியசாலை நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளன.

சுகாதாரத் தொழிற்சங்க ஒன்றியத்தின் உறுப்பினர்களால் இன்று(08) காலை 6.30 முதல் நாளை (09) காலை 6.30 வரையான அடையாளப் பணிப்பகிஷ்கரிப்பு ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

சம்பளம் மற்றும் கொடுப்பனவுகள் இரத்து செய்யப்பட்டுள்ள விடயங்களை அடிப்படையாகக் கொண்டு இந்த அடையாளப் பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளது.

வைத்தியர்கள் மற்றும் தாதியர் தொழிற்சங்கங்கள் தவிர்ந்த ஏனைய அனைத்து சுகாதாரத் தொழிற் சங்கங்களும் இந்த அடையாளப் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளன

CATEGORIES
TAGS
Share This