ரூபா வலுப்பெறுவதாக அரசு கூறுவது பொய்

ரூபா வலுப்பெறுவதாக அரசு கூறுவது பொய்

ரூபாவின் பெறுமதி வலுவடைந்து வருவதாக கூறுவது பொய்யானது என ஜனதா விமுக்தி பெரமுனவின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.

அந்த அறிக்கைகள் முற்றிலும் பொருத்தமற்றவை எனவும், தேர்தலை நடத்துவதற்கு போதிய பணம் இல்லாத நாடாக இலங்கை இன்று மாறியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ரூபாவின் பெறுமதி வலுவடைந்து வருவதாக கூறுகின்றனர் ஆனால் அது பொய்யானது. திடீரென இதனை அரசு கூறுகிறது.

மேலும், உறுதியான தேர்தல் திகதியை தேர்தல் ஆணைக் குழு உடனடியாக அறிவிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

தேசிய மக்கள் சக்தியின் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

CATEGORIES
TAGS
Share This