மஹிந்த தலைமையில் முக்கிய கலந்துரையாடல்

மஹிந்த தலைமையில் முக்கிய கலந்துரையாடல்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தலைமையிலான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் முக்கிய கலந்துரையாடல் ஒன்றை முன்னெடுத்திருந்தனர்,

குறித்த கலந்துரையாடல் நேற்று செவ்வாய்க்கிழமை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் இல்லத்தில் இடம்பெற்றிருந்தது.

இதன்போது பொருளாதார நெருக்கடி, உள்ளூராட்சி சபைத் தேர்தல் போன்ற விடயங்களுக்குப் பொதுஜன பெரமுன எவ்வாறு உதவ முடியும் என்பது தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

மேலும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியை முன்னோக்கிக் கொண்டு செல்லும் வழிகள் தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை இந்த சந்திப்பில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் முன்னாள் அமைச்சருமான பசில் ராஜபக்சவும் கலந்துகொண்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

CATEGORIES
TAGS
Share This