பெருவில் கோர விபத்து- 13 பேர் பலி!

பெருவில் கோர விபத்து- 13 பேர் பலி!

தென் அமெரிக்க நாடான பெருவின் பியூரா பகுதியில் இடம்பெற்ற கோர விபத்தில் 13 பேர் பலியாகியுள்ளனர்.

பெருவின் பியூரா பகுதியில் இருந்து அதன் தலைநகரான லிமாவுக்கு பேருந்து ஒன்று சென்றுக் கொண்டிருந்தது. இந்த பேருந்தில் சுமார் 50 பேர் பயணம் செய்தனர். அன்காஷ் என்ற இடத்துக்கு அருகே பேருந்து சென்று கொண்டிருந்தபோது எதிரே வேகமாக வந்த டாக்ஸி நேருக்கு நேர் மோதியதில் பேருந்தும், டாக்ஸியும் தீப்பிடித்து எரிந்தது.

இந்த கோர விபத்தில் 13 பேர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்தனர். இதுகுறித்து தகவலறிந்த மீட்பு படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். இதில் படுகாயம் அடைந்த 6 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு தீவர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து தொடர்பாக பொலிசார் வழக்கு பதிவு செய்து பேருந்து சாரதியை கைது செய்தனர்.

CATEGORIES
TAGS
Share This