ரணில் – ராஜபக்‌ஷ அரசை விரட்டியடிப்போம்; கொழும்பில் இன்று பாரிய ஆர்ப்பாட்டப் பேரணி

ரணில் – ராஜபக்‌ஷ அரசை விரட்டியடிப்போம்; கொழும்பில் இன்று பாரிய ஆர்ப்பாட்டப் பேரணி

அரசாங்கத்திற்கு எதிராக இன்று செவ்வாய்க்கிழமை கொழும்பில் பாரிய ஆர்ப்பாட்டப் பேரணியை நடத்துவதற்கு அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் திட்டமிட்டுள்ளது.

”ரணில் – ராஜபக்‌ஷ அரசாங்கத்தை விரட்டியடிப்போம் – மாற்றத்திற்காக அணிதிரள்வோம்” என்ற தொனிப்பொருளில் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இந்த ஆர்ப்பாட்டப் பேரணியை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இதேவேளை பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்குமாறும், நிறைவேற்று ஜனாதிபதி முறையை ஒழிக்குமாறும் இந்த ஆர்ப்பாட்டத்தின் போது அரசாங்கத்தை வலியுறுத்தவுள்ளதாக அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

இந்த பேரணியில் அனைத்து பல்கலைக்கழகங்களில் இருந்தும் பெருமளவான மாணவர்கள் கலந்துகொள்வார்கள் என்று அந்த ஒன்றியம் தெரிவித்துள்ளது.

இவர்களின் ஆர்ப்பாட்டப் பேரணி காரணமாக அரச கட்டிடங்களின் பாதுகாப்பை பலப்படுத்த பாதுகாப்பு தரப்பினர் நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை பேரணி ஜனாதிபதி செயலகம் நோக்கி பயணிக்கலாம் என்பதனால் அதனை தடுத்து நிறுத்துவதற்காக நீதிமன்றங்களை நாடுவதற்கு பொலிஸார் திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

CATEGORIES
TAGS
Share This