மாமனிதர் கிட்டினன் சிவநேசனின் 15 ஆம் ஆண்டு நினைவேந்தல்!

மாமனிதர் கிட்டினன் சிவநேசனின் 15 ஆம் ஆண்டு நினைவேந்தல்!

மாமனிதர் கிட்டினன் சிவநேசன் அவர்களது 15ஆம் ஆண்டு நினைவேந்தல் திங்கட்கிழமை உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்ப்பாட்டில் இடம் பெற்ற குறித்த நினைவேந்தல், வடமராட்சி, கரவெட்டி தெற்கு, மேற்கு பிரதேச சபை மண்டபத்தில் இடம்பெற்றது.

இதில் முதல் நிகழ்வாக பொது ஈகை சுடரினை மாமனிதர் கிட்ணன் சிவனேசன் அவர்களுடைய புதல்வி தாட்சாயினி சிவனேசன் ஏற்றினார். இதைத்தொடர்ந்து அவரது திருவுருவ படத்திற்க்கு மாமனிதர் அவர்களது புதல்விகள் மலர்மாலை அணிவித்தனர்.

இதன்பிறகு தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பேச்சாளர் க.சுகாஸ் மற்றும் உறவுகள் ஆதரவாளர்கள், உட்பட பலரும் அணிவித்தது மலர் அஞ்சலி செலுத்தியதோடு, நினைவுரைகளும் ஆற்றப்பட்டன.

தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் யாழ். மாவட்டப் நாடாளுமன்ற உறுப்பினராக சேவையாற்றி வந்த காலத்தில் 2008ஆம் ஆண்டு இதே நாளில், மாங்குளம் குஞ்சுக்குளம் பகுதியில் வைத்து கிளைமோர்த் தாக்குதலில் படுகொலை செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

CATEGORIES
TAGS
Share This