பாலி மொழி: செம்மொழி அந்தஸ்து வழங்கிய மோடி
புத்தரின் போதனைகளை போற்றும் சர்வதேச அபிதம்மல் திவஸ் நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டார்.
இந்நிகழ்ச்சியில் பாலி மொழிக்கு செம்மொழி அந்தஸ்து வழங்கியிருப்பது தொடர்பில் அவர் கூறியிருப்பதாவது,
“மிகவும் பழைமையானதும் தொன்மையானதுமான பாலி மொழிக்கு செம்மொழி அந்தஸ்த்தை மத்திய அரசு வழங்கியுள்ளது.
இது புத்தரின் மகத்தான பாரம்பரித்தைய உலகுக்கு எடுத்துக்காட்ட உதவும்.
சுதந்திரத்தின் பின்னர் ஆட்சி செய்த காங்கிரஸ் இந்தியாவின் பாரம்பரியத்தை போற்றாமல் புறக்கணித்தது.
ஒவ்வொரு நாடும் அதன் பாரம்பரியத்தையும் பண்பாட்டையும் பெருமைப்படுத்தும்போது, இவ் விடயத்தில் இந்தியா மிகவும் பின் தங்கியுள்ளது.
நாடு இப்போது சுயமரியாதை மற்றும் நம்பிக்கையுடன் முன்னேறி வருகிறது.
இந்த மாற்றம் துணிச்சலான முடிவுகளை அரசு எடுக்க காரணமாக உள்ளது.
இந்த துணிச்சலான முடிவின் ஒரு பகுதியே பாலிக்கு செம்மொழி அந்தஸ்து வழங்கப்பட்டமை” எனக் கூறியுள்ளார்.