ட்ரம்ப்பை இலக்கு வைத்து மீண்டும் துப்பாக்கி பிரயோகம்; உடல் நிலை குறித்து வெளியான தகவல்

ட்ரம்ப்பை இலக்கு வைத்து மீண்டும் துப்பாக்கி பிரயோகம்; உடல் நிலை குறித்து வெளியான தகவல்

முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மீது மீண்டும் துப்பாக்கச்சூடு நடத்தும் முயற்சி இடம்பெற்றுள்ளது.

அமெரிக்காவில் ஜனாதிபதித் தேர்தல் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள நிலையில் குடியரசுக்கட்சி சார்பில் ட்ரம்ப் போட்டியிடுகிறார்.

இந்நிலையில் மேற்கு பாம் பீச் பகுதியில் உள்ள சர்வதேச கோல்ப் கிளப்பில் டிரம்ப் விளையாடிக்கொண்டிருந்த போது அவருடைய பார்வைக்கு உட்பட்ட தொலைவில் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளது.

இதன்பின்னர் ட்ரம்பை அங்கிருந்து பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டார்.

அண்மையில் பென்சில்வேனியாவின் பட்லர் பகுதியில் முன்னாள் ட்ரம்ப் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் அவர் காயமடைந்தார்.

டிரம்ப் இருந்த பகுதிக்கு அருகில் துப்பாக்கி சூடு நடத்தப்பட்ட சம்பவம் அமெரிக்காவில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் தற்போது இடம்பெற்ற சம்பவம் குறித்து ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் விசாரணைகள் இடம்பெற்று வருவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனல்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

இது குறித்து விளக்கமளித்த ட்ரம்ப்,

டிரம்ப் மீதான கொலை முயற்சி என சந்தேகிக்கப்படும் துப்பாக்கி சூடு குறித்து மத்திய சட்ட அமலாக்கப் பிரிவினர் என்ன விசாரணை நடத்தி வருகின்றனர் என்பது குறித்து எனது குழுவினரால் எனக்கு விளக்கப்பட்டது.

சந்தேகத்துக்குரிய நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். முன்னாள் ஜனாதிபதியையும் அவரைச் சுற்றியிருப்பவர்களையும் பாதுகாக்க சட்ட அமலாக்கப் பிரிவினருக்கு உத்தரவிட்டுள்ளேன்.

முன்னாள் அதிபருக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என்பதில் நிம்மதியடைந்துள்ளேன். நான் பலமுறை கூறியது போல், நம் நாட்டில் அரசியல் வன்முறைகள் உட்பட எந்தவிதமான வன்முறைகளுக்கும் இடமில்லை” என்றார்.

CATEGORIES
Share This