பிரான்சில் மக்கள் போராட்டம்… மக்ரோனின் நியமித்த பழைமைவாத – வலதுசாரி புதிய பிரதமருக்கு எதிர்ப்பு!

பிரான்சில் மக்கள் போராட்டம்… மக்ரோனின் நியமித்த பழைமைவாத – வலதுசாரி புதிய பிரதமருக்கு எதிர்ப்பு!

பிரான்சில் ஆயிரக்கணக்கான மக்கள் கடந்த சனிக்கிழமையன்று (7/9/24) தெருக்களில் இறங்கி, இம்மானுவேல் மக்ரோனின் மத்திய வலதுசாரி மிஷெல் பார்னியரை (Michel Barnier) பிரதமராக நியமித்ததற்கு எதிர்ப்புத் தெரிவித்து போராடினர்.

இன்னமும் பார்னியர் புதிய பிரதமராக நியமிக்கப்பட்டதற்கு எதிராக பிரான்சில் போராட்டக்காரர்கள் பேரணி நடத்தி வருகின்றனர்.

அதேவேளை தேர்தல் முடிவுகளை மக்ரோன் புறக்கணித்துவிட்டார் என்று 74% பிரெஞ்சு மக்கள் கருதுவதாகவும், 55% பேர் அவர் அவற்றைத் திருடிவிட்டதாகவும் நம்புவதாகக் காட்டும் கருத்துக்கணிப்பை ‘Polster Elabe’ ஊடகம் கடந்த வெள்ளிக்கிழமை வெளியிட்டது.

அத்துடன் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோனை கண்டித்தும் நாடு தழுவிய ரீதியில் பார்னியர் நியமனத்திற்குப் பிறகு நாண்டேஸில் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தலைநகர் மட்டுமின்றி, மேற்கில் நான்டெஸ், தெற்கில் நைஸ் மற்றும் மார்செய்ல் மற்றும் கிழக்கில் ஸ்ட்ராஸ்பேர்க்கிலும் எதிர்ப்புக்கள் நடந்தன.

ஐரோப்பிய ஊடகத் தகவலின் படி, 100,000 க்கும் மேற்பட்ட இடதுசாரி ஆர்ப்பாட்டக்காரர்கள் பிரான்ஸ் முழுவதும் தெருக்களில் இறங்கி போராடி உள்ளனர். இதற்கு வலதுசாரி மிஷெல் பார்னியரை பிரதமராக நியமிப்பதற்கான ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோனின் முடிவே காரணமாகும்.

அத்துடன் இடதுசாரி கட்சிகள் அதிபர் மக்ரோன் தேர்தல்களைத் திருடியதாகக் குற்றம் சாட்டி உள்ளனர். இதேவேளை உள்துறை அமைச்சகம், பாரிஸில் 26,000 பேர் உட்பட நாடு முழுவதும் 110,000 பேர் தெருக்களில் இறங்கி, வலதுசாரி மிஷெல் பார்னியரை பிரதமராக நியமிப்பதற்கான ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோனின் முடிவை எதிர்த்து பிரான்ஸ் முழுவதும் ஆயிரக்கணக்கானோர் வீதிகளில் இறங்கி போராட்டம் நடத்தினர் என்றும் அறிவித்துள்ளது.

அதிபர் மக்ரோன் பதவி விலக வேண்டுதல்:

புதிய பிரதமரான பழைமைவாதப் போக்கை ஆதரிக்கும் திரு. மிஷெல் பானியே (Michel Barnier) நியமிக்கப்பட்டதற்கு எதிராக முற்போக்குச் சிந்தனை கொண்டோர் தொடர்ந்தும் ஆர்ப்பாட்டம் நடத்துகின்றனர். பிரெஞ்சு அதிபர் இம்மானுவெல் மக்ரோன் (Emmanuel Macron) அதிகாரத்தைக் கையில் வைத்துக்கொள்ள முயல்வதாகவும் அவர்கள் குற்றஞ் சாட்டியுள்ளனர்.

அண்மைய போராட்டங்களில் தலைநகர் பாரிஸில் மட்டும் பல்லாயிரம் பேர் திரண்டதாகக் காவல்துறை கூறுகிறது. ஆனால் அதைவிட மேலும் அதிகமானோர் கூடியதாக ஏற்பாட்டாளர்கள் சொல்கின்றனர். நீஸ் (Nice), மார்சே (Marseille) நகரங்களிலும் ஆர்ப்பாட்டங்கள் மேலும் நடந்தன.

பிரான்ஸில் அரசியல் இழுபறி நிலவும் இவ்வேளையில் அதிபர் மக்ரோன் பதவி விலகவேண்டும் எனும் குரல் வலுத்து வருகிறது.

பிரெக்சிட் பேச்சுவார்த்தையாளர்:

பிரான்சின் அரசியல் முட்டுக்கட்டைக்கு மத்தியில் இடதுசாரி அரசாங்கத்தை அமைக்க மக்ரோன் நிராகரித்து, 73 வயதான பார்னியரை பிரதம மந்திரியாக நியமித்தார். மிஷெல் பார்னியர் முன்னாள் பிரெக்சிட் பேச்சுவார்த்தையாளர் ஆவார்.

கடந்த ஜூலை வாக்கெடுப்பில் முதலிடம் பிடித்த புதிய பாப்புலர் ஃப்ரண்ட் (NFP) கூட்டணியின் வேட்பாளரை தேர்வு செய்ய மக்ரோன் மறுத்ததை அடுத்து, தீவிர இடதுசாரியான பிரான்ஸ் அன்போட் (LFI) கட்சியின் தலைமையிலான இடது, மக்ரோன் தேர்தலை திருடியதாக குற்றம் சாட்டியுள்ளார்.

பல ஆர்ப்பாட்டக்காரர்கள் தங்கள் கோபத்தை மக்ரோன் மீது செலுத்தினர் மற்றும் சிலர் அவரை ராஜினாமா செய்யுமாறு அழைப்பு விடுத்தனர்.

ஐந்தாவது குடியரசு சரிகிறது!

ஐந்தாவது குடியரசு சரிந்து கொண்டிருக்கிறது என்று எதிர்கட்சியின் மனோன் போனிஜோல் கூறியுள்ளார்.

பார்னியருக்கு வேலை கொடுப்பதன் மூலம் மக்ரோன் தீவிர வலதுசாரிகளை அரசாங்கத்தில் இருக்க அனுமதிக்கிறார் என்று எதிர்ப்பாளர்கள் மிக காட்டமாக நம்புகிறார்கள் என்றார்.

பிரான்ஸின் அரசியல் நிலப்பரப்பில் முன்னெப்போதையும் விட தீவிர வலதுசாரிகள் மிகவும் சக்திவாய்ந்தவர்களாக இருக்க மக்ரோன் கதவைத் திறந்தார் என்றும் அவர் கூறியுள்ளார். மேலும் மக்ரோன் ஜனநாயகத்தை கேலிக் கூத்தாக்கியதாக உணர்வதாக அவர் கூறியுள்ளார்.

பிரான்ஷ் ஊடகமான ‘Polster Elabe’ வெள்ளிக்கிழமையன்று ஒரு கணக்கெடுப்பை வெளியிட்டது. பிரெஞ்சு மக்களில் 74 சதவீதம் பேர் மக்ரோன் தேர்தல் முடிவுகளைப் புறக்கணித்ததாகக் கருதினர், 55 சதவீதம் பேர் அவர் அவற்றைத் திருடியதாக நம்புகிறார்கள் என அந்த கருத்து கணக்கெடுப்பு தகவலை வெளியிட்டது.

மக்ரோன் தேர்தல் முடிவுகளை அவமதிக்கிறாரா ?

பிரான்சின் மக்ரோனின் புதிய பிரதமர் தேர்வு, கடந்த தேர்தல்களின் முடிவைப் பிரதிபலிக்கவில்லை என்று எதிர் கட்சியினர் கருதுகின்றனர்.

பார்னியரின் நியமனத்திற்கு எதிர்க்கும் வகையில், 50க்கும் மேலான சட்டமன்ற உறுப்பினர்கள், இடதுசாரிக் கட்சித் தலைவர்கள், தொழிற்சங்கங்கள் மற்றும் மாணவர் அமைப்புகள் வெகுஜனப் போராட்டங்களுக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.

இத் நிலையில், பாராளுமன்றத்தில் நான்காவது பெரிய Les Républicains கட்சி அக்டோபர் 1 அன்று முதல் தொடர் வேலைநிறுத்தம் செய்ய கோரியுள்ளனர்.

இடதுசாரிகள் கடும் எதிர்ப்பு:

பிரான்சின் புதிய பிரதமராக வலதுசாரி கட்சியை சேர்ந்தவரை ஜனாதிபதி இமானுவல் மேக்ரான் தெரிவு செய்துள்ளதற்கு இடதுசாரிகள் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.
ஜனநாயக மறுப்பை நிகழ்த்தியுள்ளதாகவும், வலதுசாரி அரசியல்வாதியைத் தெரிவு செய்திருப்பதன் மூலம் ஜனாதிபதி மேக்ரான் ஜனநாயக மறுப்பை நிகழ்த்தியுள்ளதாகவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

நாடாளுமன்றத்திற்கான கடந்த ஜூலை தேர்தலில் ஆட்சி அமைக்கும் பெரும்பான்மை எந்த கூட்டணியும் பெறாத நிலையில், சுமார் 2 மாதங்களுக்கு பின்னர் பிரதமர் பொறுப்புக்கு பார்னியேர் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இதனை எதிர்த்த நிலையிலேயே தீவிர இடதுசாரி கட்சியினர் நாடு முழுவதும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பார்னியேர் பிரதமராக அறிவிக்கப்படும் முன்னர் NFP கட்சியின் 37 வயது Lucie Castets என்பவரை பிரதமராக தெரிவு செய்ய மறுத்தால், மக்ரோன் அரசாங்கத்தின் மீது நம்பிக்கையில்லா பிரேரணையை முன்வைப்போம் என்று அக்கட்சி அச்சுறுத்தி உள்ளது.

CATEGORIES
Share This