போலி முகநூல் கணக்குகள் தொடர்பில் தினசரி 200 முறைப்பாடுகள்!

போலி முகநூல் கணக்குகள் தொடர்பில் தினசரி 200 முறைப்பாடுகள்!

தங்களது பெயரைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்டு வரும் போலி முகநூல் கணக்குகளை அகற்றுமாறு கோரி குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவிற்கு தினசரி 200 முறைப்பாடுகள் கிடைக்கப் பெறுவதாகக் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவின் பிரதிப் பணிப்பாளர் தர்ஷிகா குமாரி ஜயசிங்க தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்த அவர், போலி முகநூல் கணக்குகளை அகற்றுமாறு கோரி கிடைக்கப்பெறும் முறைப்பாடுகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் இதற்கு முன்னர் கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகள் தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டதா என்பது தொடர்பில் கண்டறிய முடியவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

இவ்வருடத்தின் முதல் மூன்று மாதங்களில் மாத்திரம் சுமார் 1,500 முறைப்பாடுகள் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவிற்குக் கிடைக்கப் பெற்றுள்ளதாக அவர் தெரிவித்தார்.

இந்த முறைப்பாடுகளின் படி பெண்கள் மற்றும் சிறுவர்களே அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

CATEGORIES
TAGS
Share This