இன்றைய ராசிபலன் – 01.04.2024

இன்றைய ராசிபலன் – 01.04.2024

பொதுப்பலன்: மருந்து உண்ண, வீட்டை சீரமைக்க, வீடு, மனை பட்டா பெற, வழக்கு, சொத்து விவகாரங்கள், பங்காளி பிரச்சினை பேசி தீர்க்க, தற்காப்பு கலை பயில நல்ல நாள். எதிரிகள் மீது வழக்கு தொடர்ந்தவர்கள் வழக்கறிஞர் களின் ஆலோசனைப்படி செயல்பட வேண்டும். சிவஸ்துதி படித்து, சிவன் கோயில்களில் அபிஷேகம், அர்ச்சனை செய்து, எள் தீபம் ஏற்றினால் நன்மை உண்டாகும். பச்சரிசி அல்லது நெல் தானம் செய்தால், காரியங்கள் நிறைவேறும்.

மேஷம்: மனதில் இருந்த பயம் நீங்கி தைரியம் பிறக்கும். கணவன் – மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக் கும். பிள்ளைகள் உடல்நிலை சீராகும். வியாபாரத்தில் பழைய சரக்குகளை விற்று காசாக்குவீர்கள்.

ரிஷபம்: மனதில் இருந்த பயம் நீங்கி தைரியம் பிறக்கும். கணவன் – மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக் கும். பிள்ளைகள் உடல்நிலை சீராகும். வியாபாரத்தில் பழைய சரக்குகளை விற்று காசாக்குவீர்கள்.

Play Video
Close PlayerUnibots.com

மிதுனம்: வெளி வட்டாரத்தில் புதியவர்களின் நட்பும், அதனால் ஆதாயமும் கிடைக்கும். தள்ளிப்போன வழக்கில் சாதகமான திருப்பம் வரும். அரசு, வங்கி காரியங்கள் விரைந்து முடியும்.

கடகம்: பழைய பிரச்சினைக்கு சுமுக தீர்வு கிடைக்கும். அதிகார பதவியில் இருப்பவர்களின் அறிமுகம் உண்டாகும். எதிர்பார்த்த இடத்தில் இருந்து நல்ல சேதி வரும். வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள்.

சிம்மம்: நீங்கள் விரும்பிய புதிய பாதையில் பயணிக்க தொடங்குவீர்கள். பணவரவு உண்டு. உங்கள் ரசனைக்கேற்ப வீடு, வாகனம் அமையும். கணவன் – மனைவிக்குள் மனம்விட்டு பேசுவீர்கள்.

கன்னி: இழுபறியாக இருந்த வேலைகள் முடியும். பெற்றோர் உடல்நலம் சீராகும். அரசு, வங்கி சம்பந்தப்பட்ட காரியங்கள் சாதகமாக முடியும். வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள்.

துலாம்: வெகு நாட்களாக மனதை வாட்டிய பிரச்சினைக்கு முடிவுகட்டுவீர்கள். குடும்பத்தில் நிம்மதி உண்டு. ஆடை, ஆபரணங்கள் சேரும். வியாபாரத்தில் பணியாளர்கள் ஆதரவாக இருப்பார்கள்.

விருச்சிகம்: உங்கள் எதார்த்தமான பேச்சால், தடைபட்ட காரியங்களை முடித்துக் காட்டுவீர்கள். குடும்பத்தினர் ஆதரவு பெருகும். பிள்ளைகளின் உடல்நலம் சீராகும். வியாபாரத்தில் போட்டிகள் விலகும்.

தனுசு: பல சவால்கள், போட்டிகளை எதிர்கொள்ள நேரிடும். குடும்பத்தில் விட்டுக்கொடுத்து செல்லுங்கள். உடல்நலத்தில் அக்கறை காட்டுவது அவசியம். தொழில், வியாபாரத்தில் நிதானம் தேவை.

மகரம்: பால்ய நண்பர்கள் ஆதரவாக இருப்பார்கள். தாய்வழி உறவினர்களால் மகிழ்ச்சி தங்கும். தலைவலி, வயிற்று வலி கோளாறு சரியாகும். அலுவலகத்தில் உயர் அதிகாரி அன்புகாட்டுவார்.

கும்பம்: பண வரவால் பழைய கடனை அடைப்பீர்கள். குடும்பத்தில் உங்கள் பேச்சுக்கு மதிப்பு கூடும். பிள்ளைகள் உடல்நிலை சீராகும். வாகன செலவு குறையும். தொழில் போட்டிகள் குறையும்.

மீனம்: எதிர்மறை எண்ணங்கள் மறையும். முகத்தில் தெளிவு பிறக்கும். கையில் காசு, பணம் புரளும். குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவு உண்டு.

CATEGORIES
TAGS
Share This