தந்தை செல்வாவின் 126 ஆவது பிறந்ததினம்!
தந்தை செல்வாவின் 126 ஆவது பிறந்ததினம் இன்று (31) யாழில் அனுஷ்டிக்கப்பட்டது.
தந்தை செல்வா அறங்காவலர் சபையின் ஏற்பாட்டில் யாழிலுள்ள தந்தை செல்வா நினைவு சதுக்கத்தில் இன்று காலை இந்நிகழ்வு நடைபெற்றது.
இதன் போது தந்தை செல்வாவின் நினைவு தூபிக்கு மலர் மாலை அணிவித்து மலரஞ்சலி செலுத்தப்பட்டது.
இதன் போது முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா வடக்கு மாகாண அவளத் தலைவர் சிவஞானம் உள்ளிட்ட தமிழரசுக் கட்சி உறுப்பினர்கள் பொது மக்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
CATEGORIES பிராந்திய செய்தி