மின்சார முச்சக்கரவண்டிகளை உற்பத்தி செய்யும் தொழிற்சாலை முதன்முறையாக கொழும்பில்!

மின்சார முச்சக்கரவண்டிகளை உற்பத்தி செய்யும் தொழிற்சாலை முதன்முறையாக கொழும்பில்!

இலங்கையில் முதன்முறையாக மின்சார முச்சக்கரவண்டிகளை உற்பத்தி செய்யும் முழுமையான தொழிற்சாலை மருதானை புகையிரத திணைக்கள களஞ்சியசாலை வளாகத்தில் திறக்கப்படவுள்ளது.

வேகா பொறியியல் நிறுவனத்தினால் மருதானை புகையிரத களஞ்சியசாலை வளாகத்தில் புதிதாக நிறுவப்பட்ட மின்சார முச்சக்கரவண்டிகள் உற்பத்தி மற்றும் முச்சக்கரவண்டிகளை மின்சாரமாக மாற்றும் தொழிற்சாலை வளாகம் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன தலைமையில் திறந்து வைக்கப்பட்டது.

இந்நாட்டிலேயே முழுமையாக உற்பத்தி செய்யப்படும் Vega நிறுவனத்தின் ELEKTRATEQ முச்சக்கர வண்டியின் முழு உற்பத்தி செயல்முறையும் இந்த உற்பத்தி தொழிற்சாலை வளாகத்திலேயே மேற்கொள்ளப்படுகிறது.

CATEGORIES
TAGS
Share This